Showing posts with label உளவியல். Show all posts
Showing posts with label உளவியல். Show all posts

Wednesday, July 11, 2012

உள்ளத்தின் ஓசை - 3

"முல்லா நசுருதீன் வீட்டிற்கு  சொந்தகாரர்  

ஒருவர் வாத்து  ஒன்றை கொண்டு வந்தார் 

அதை முல்லாவின் மனைவி சமைத்து 

இருவருக்கும் பரிமாறினாள் "


கொஞ்ச நாட்கள் கழித்து வரிசைகரமாகப் பலர் 

அந்த வாத்து கொண்டு 

வந்தவரின் சொந்தக்காரரின் உறவினர் , உறவினருக்கு உறவினர் என்று 

சொல்லிக் கொண்டு வந்தவண்ணம் இருந்தனர்.


அவர்கள் அனைவரும் தங்களை ஒரே மாதிரியாக கவனிக்க் வேண்டும்

 ,சாப்பாடு தரவேண்டும் என்று எதிர்பார்த்தனர் .

ஒரு நாள் அந்த வாத்து கொண்டு வந்தவரின் நண்பரோட நண்பர் என்று 

சொல்லிக்கொண்டு ஒருவர் வந்தார்.


முல்லாவிற்கு தாங்க முடியாத கோபம் வந்தது .. ஒரு கிண்ணம் நிறைய சுடு 

தண்ணீர் கொண்டு வந்து அவர் முன் வைத்தார் . அவர் ஒரு வாய் 

அருந்திவிட்டு " என்ன இது ?'" என்று கேட்டார் .


இது உங்கள் நண்பர் கொண்டு வந்த வாத்தினுடைய சூப்பினுடைய 

சூப்பினுடைய சூப்பு என்றார் முல்லா .


அதற்க்கு பின் வருபவர்கள் எண்ணிக்கை நின்று போனது .

இப்படிதான் நம் வாழ்வில் பல சம்பவங்கள் நடக்கிறது .


ஒருவன் நல்லவனாக பண்புள்ளவனாக நடக்க முயன்றால் அவனின் 

குணநலத்தை பரிசோதிக்க என்று ஒரு சாரர் கிளம்புகிறார்கள் ........அதையும் 

மீறி அவன் தன பண்பில் இருந்து விலகாமல் இருக்க பல தடைகளை வலிகளை  

எதிர்கொண்டு வந்தாலும் .....சமூகம் அவனை வாழ்த்த தயாராக இல்லை 

மாறாக அவனை வீழ்த்தவே முற்படுகிறது.


முந்தய காலகட்டங்களை பின்னோக்கி பார்த்தோமானால் பல அரசர்கள் 

,வள்ளல்கள் தங்களின் சொத்துகளை இழந்து சோற்றுக்கு வழியில்லாத 

நிலைக்கு வந்திருப்பது தெரிய வரும் ..


இந்த கால கட்டத்திற்கு பின் தான் 


" தனக்கு மிஞ்சிதான் தானம் தர்மம் "


என்ற பழ  மொழி வந்திருக்க வேண்டும் ....

தன்னை காத்துகொண்டு அதன் பின் மற்றவர்களையும் காக்க நினைப்பது 

சிறப்பு .மேலும் தன உணர்வுகளை உரிய நேரத்தில் வெளிபடுத்த தவறுபவன் 

வாழ்வில் பின்னுக்கு தள்ளபடுகிறான் 




                                                                                                             ( ஓசை தொடரும் )

Friday, July 6, 2012

உள்ளத்தின் ஓசை - 2



இசை வாழ்வில் அனைத்து தரப்பிலும் வரவேற்க்கபடுகின்ற ஓன்று ........

     ஜாதிமத பேதமின்றி சமத்துவ பந்தியிடும் வள்ளல் அது


நல்லவன் - கெட்டவன் , பணக்காரன் -  ஏழை , என்று  எந்தவித பாகுபாடும்

    பார்க்காமல் அனைவரையும் அரவணைக்கும் ஆத்ம நண்பன் ..........

    நம் எல்லோருக்கும் பிடித்த அந்த இசையும் ஓசையுடையது தான் ..


ஆனால் அந்த இசைக்கு நடுவே அமைந்திருக்கும் இடைவெளிகளில் இருக்கும்

   அமைத்திதான் இறைமை ......


அந்த அமைதியை நாம் பல நேரங்களில் உணருகிறோம் அப்போது நம்மால்

     பேச இயலாது ........வெளியே நடப்பதை உணர மாட்டோம் ........எதுவும்

     இல்லாத ஒரு அமைதி நிலைக்கு செல்லுவோம் ...............



பேசும் போது  கூட இரண்டு சொற்களுக்கான ஒரு இடைவெளியில் ஒரு 

     ஓசையற்ற தன்மையை உணர முடியும் ...


ஒவொரு ஓசையிலும் இருக்கும் ஓசையற்ற நிலையை புரிந்துகொள்ள நமக்கு

     சில கால அவகாசங்கள் தேவைபடுகிறது .


அப்படிதான் தியானமும்

     தியானம் என்பது நாம் இதுவரை கற்றுக்கொண்ட தெரிந்துகொண்ட

     விசயங்களை வெளியேற்றுவது ..


"அதற்க்கு நம்மை தயார்படுத்த வேண்டும் என்றால் வெளியே நடக்கிற

     நிகழ்வுகளை புரிந்துகொண்டு நம்மை அதிலிருந்து துண்டித்துக்கொள்ள

     வேண்டும் ."


"தயிரிலிருந்து வெண்ணையை பிரித்தெடுக்க ஏற்ப்படும் கால

     அவகாசத்தை போல "   காத்திருப்பது அவசியம் தியானத்திற்கு .


                                                                                                             (ஓசை தொடரும் )

Thursday, July 5, 2012

உள்ளத்தின் ஓசை - 1

ஒரு மடாலயத்தில்  தலைமை குரு அவருக்கு கீழ் பல சீடர்கள் , அவர்களில்

மிகவும் வயதில் இளைய ஒரு சீடன் அந்த மடாலயத்தின் சில பொறுப்புகளை

கவனித்து வந்தான் .


"அங்கு வருகிற சீடர்கள் குருவிடம் தியானதை கற்பதைவிட அவரிடம் சில

விடுகதைகளை கூற சொல்லி அதற்க்கு விடை கேட்பதில் முனைப்பாக

இருப்பதை அவன் கவனித்து வந்தான் ."


 இந்த இளைய சீடனுக்கும் அந்த விடுகதை பற்றியும் தியானத்தை பற்றியும்

 கேட்க ஆவலாக இருந்தது ..நேரடியாக குருவிடம் சென்று எனக்கும்

கற்றுகொடுங்கள் என்று கேட்டான்'


அதற்க்கு குரு "" உனக்கு இன்னும் அந்த வயது வரவில்லை அது வரை

பொறுத்திரு என்றார் " ஆனால் அவனோ  அடம்பிடிக்கிறான் அதனால் குரு

ஒப்புக்கொண்டு ஒரு விடுகதையை முன் வைக்கிறார்.


"எனக்கு  இரண்டு கைகளின் ஓசை பற்றி தெரியும்

ஆனால் ஒரு கையின் ஓசை பற்றி சொல்லுகிறாயா ? என்று கேட்டார் .


சீடன் அவரை வணங்கிவிட்டு அறைக்குள் வந்து சிந்திக்கிறான் சில பறவைகள்

இசைப்பதை  கேட்கிறான் .


மறுநாள் குருவை பார்த்து  குரலில் இசைத்து காட்டி இதுதான் அந்த ஓசை

என்று சொல்லி அவரின் பாராட்டிற்காக காத்திருக்கிறான்

"இல்லை இல்லை என்று மறுத்துவிடுகிறார் "


சீடன் மீண்டும் அமைதியான இடத்திற்கு சென்று தியானம் செய்கிறான் ......

அவன் சித்திக்கும் போது  சொட்டு சொட்டாக நீர் விழும் சப்தம் கேட்டு அதுதான்

ஒரு  கை ஓசை என்று குருவிடம் சொல்லுகிறான் .அதையும் மறுக்கிறார் குரு.


ஒவொருமுறையும் பல வித சப்தங்களை கேட்டு வந்து சொல்லுகிறான் அவர்

எல்லாவற்றையும் மறுக்கிறார்......


"பத்தாவது முறையாக அவன் நிராகரிக்கப்பட்டபோது தான் மீண்டும்

தியானத்தில் அமருகிறான் அது உண்மையான தியானமாக மலர்கிறது அறிய

வேண்டும் என்ற ஆர்வம் கூட    அகண்டு சென்றது .


தியானம் தியானத்திர்காகவே   நிகழ்ந்தது அது வார்த்தைகளற்று உருவானது

மனத்திரையில் எந்த வித காட்சிகளும் உருவாகாத மௌன நிலையை

அடைந்தான் .


சப்தங்களைஎல்லாம் அவன் கடந்து சென்றான் அப்போது அவனுக்கு புரிந்தது

"ஒரு கையின் ஓசை " மௌன நிலை என்று


                                                                                                               (ஓசை தொடரும் )