Monday, September 3, 2012

உள்ளத்தின் ஓசை - 15 ( சோதனை )



மனிதன் ஒரு அற்புத சக்தியின் சுரங்கம் .அவனால் முடியாதது என்பது எதுவும் இல்லை உலகில் . அவனுக்குள் இருக்கும் அற்புதங்களை அவன் உற்றுநோக்கவும் அவற்றை உணர்ந்து கொள்ளவும் அவன் முயலுவது இல்லை .

வாழ்க்கை அவனுக்கு எப்போதும் சில சோதனைகளை முன் வைத்து செல்கிறது அவற்றை தகர்த்து எறியும் திராணி அவனுக்குள் இருக்கிறதா ? என்பதே அந்த சோதனையின் நோக்கம் .....ஆனால் அவன் அதை தகர்த்து  எறிய முற்படுவதே இல்லை. சோதனைகளை தடை கல்லாக நினைத்து சோர்ந்து போகவே நினைக்கிறான் .

அந்த தடை கல்லை தகர்த்து தாண்டி வருபவன்  மட்டுமே சாதனையாளனாக வளம் வருகிறான் . "இளநீர் வேண்டும் என்று நினைப்பவன் நிச்சயம் தென்னை மரம் ஏற வேண்டும் . ஏறுவதற்கு சிரம பட்டு கொண்டு நாம் குட்டை தென்னைகளை உருவாக்குகிறோம் , அப்படி குட்டை தென்னைகளை உருவாக்கும் பொது  நமக்கு முன்பே இளநீரை வேறு யாராவது பறித்து சென்று விடுவார்கள். 

ஆகவே மரம் ஏற தெரியாதவர்களுக்கு இளநீர் கிடைப்பதில்லை மாறாக கொப்பரை தேங்காய்கள் மட்டுமே கிடைகிறது .வாழ்க்கை தென்னையை போலதான் அதன் உச்சியில் ஏற முயற்சி செய்யாதவர்கள் எப்போது காற்று வரும் ? இளநீர் எப்போது கீழே விழும் ? என்று காத்துக் கொண்டிருப்பார்கள்.

அவர்களுக்குத் தெரிவதில்லை. அப்படியோர் வேகமான காற்று அடிக்குமேயானால் அது இளநீரை மட்டும் உதிர்க்காது , மாறாக அந்த தென்னையையும் சாய்த்துவிடும் .........அதனோடு நாமும் சாய்ந்து விட கூடும் என்பதை. ஆகவே வாழ்கையை அதன் போக்கில் எதிர்கொள்ளுங்கள் கடந்து செல்ல ஆயத்தமாய் இருங்கள் .

( ஓசை தொடரும் )