Thursday, July 12, 2012

உள்ளத்தின் ஓசை - 4 ( விழிப்பு )ஈசாப்பின் கதை ஓன்று :


ஒரு காட்டில் முயல்கள் எல்லாம் கூடின .எதனை கண்டும் அஞ்சி அஞ்சி ஓடும்

     தம் வாழ்வை நினைத்து வருந்தின .

    ஓயாத துன்பத்தில் ஆழ்ந்து  வருவதைவிட தற்கொலை செய்து கொண்டு

    இறப்பதே மேல்  என்று அவை கருதின.


காட்டில் வாழும் முயல்கள் அனைத்தும் திரண்டு மலை உச்சியை நோக்கி

    நடந்தன உச்சிலிருந்து கீழே மடுவில்  குதித்து இறக்க துணிந்தன.


முயல்களின் கூட்டத்தை கண்டதும் மடுவின்  கரையில் உள்ள தவளைகள்

     எல்லாம் அஞ்சி மடுவுக்குள் பாய்ந்து மறைந்தன.சாக நினைத்த முயல்கள் வியப்புடன் தவளைகளை கூர்ந்து கவனித்தன

     உலகில்  தங்களைவிட அஞ்சி வாழும் தவளைகளும் இருகின்றன என்பதைக்

    கண்ட முயல்களுக்கு ஆறுதல் ஏற்பட்டது .


இந்த கதை ஈசாப்பின் மதி நுட்பத்திற்கு சான்று ......


நம்மில் பெரும்பான்மையானவர்கள் கழிவிரக்கதிலும் , சுய இறக்கத்திலும்

    வாழ்வை கழிக்கிறார்கள் அவர்களை விட துன்பத்திலும் சோகத்திலும்

வாழ்ந்து கொண்டிருப்பவர்களைப் பார்க்கும்போது அவர்களுக்கு ஆறுதல் 


ஏற்படுகிறது . இவர்களுக்கெல்லாம் ஒன்றை சொல்ல விரும்புகிறேன்           "அக்கறைக்கு இக்கரை பச்சை " என்ற பழ மொழி உண்டு ......அதாவது


 பள்ளத்தில் நிற்பவன் மலையை பார்த்து பெரு  மூச்சு விடுகிறான்  மலை மேல் 


நிற்பவன் பள்ளத்திலேயே இருந்திருக்கலாம் என்று  மூச்சு திணறுகிறான் 


ஆகவே ஒப்பிடுதல் என்பது ஆரோக்கியமாக இல்லாத சூழலில் மனதில்

நோய்களின்  தாக்கம் ஏற்பட்டு மிகுந்த மன உளைசளுக்கு ஆளாக நேரிடலாம் 

அதிலிருந்து விடுபட வேண்டும்


 எவன் ஒருவன் தன் துன்பங்களை எல்லாம் தாங்கிகொண்டு 


     அடுத்தவர்களின் துயரத்தை   துடைக்க   முன் வருகிறானோ அவன் 


    சான்றோன் என போற்றபடுகிறான் ஆகவே  விழுந்து விட்டோம் என்று கவலை கொள்வதை விட  எழுந்து நடக்க

முயலுவது புத்திசாலித்தனம் ..


                                                                                                              (ஓசை தொடரும் )


Wednesday, July 11, 2012

உள்ளத்தின் ஓசை - 3

"முல்லா நசுருதீன் வீட்டிற்கு  சொந்தகாரர்  

ஒருவர் வாத்து  ஒன்றை கொண்டு வந்தார் 

அதை முல்லாவின் மனைவி சமைத்து 

இருவருக்கும் பரிமாறினாள் "


கொஞ்ச நாட்கள் கழித்து வரிசைகரமாகப் பலர் 

அந்த வாத்து கொண்டு 

வந்தவரின் சொந்தக்காரரின் உறவினர் , உறவினருக்கு உறவினர் என்று 

சொல்லிக் கொண்டு வந்தவண்ணம் இருந்தனர்.


அவர்கள் அனைவரும் தங்களை ஒரே மாதிரியாக கவனிக்க் வேண்டும்

 ,சாப்பாடு தரவேண்டும் என்று எதிர்பார்த்தனர் .

ஒரு நாள் அந்த வாத்து கொண்டு வந்தவரின் நண்பரோட நண்பர் என்று 

சொல்லிக்கொண்டு ஒருவர் வந்தார்.


முல்லாவிற்கு தாங்க முடியாத கோபம் வந்தது .. ஒரு கிண்ணம் நிறைய சுடு 

தண்ணீர் கொண்டு வந்து அவர் முன் வைத்தார் . அவர் ஒரு வாய் 

அருந்திவிட்டு " என்ன இது ?'" என்று கேட்டார் .


இது உங்கள் நண்பர் கொண்டு வந்த வாத்தினுடைய சூப்பினுடைய 

சூப்பினுடைய சூப்பு என்றார் முல்லா .


அதற்க்கு பின் வருபவர்கள் எண்ணிக்கை நின்று போனது .

இப்படிதான் நம் வாழ்வில் பல சம்பவங்கள் நடக்கிறது .


ஒருவன் நல்லவனாக பண்புள்ளவனாக நடக்க முயன்றால் அவனின் 

குணநலத்தை பரிசோதிக்க என்று ஒரு சாரர் கிளம்புகிறார்கள் ........அதையும் 

மீறி அவன் தன பண்பில் இருந்து விலகாமல் இருக்க பல தடைகளை வலிகளை  

எதிர்கொண்டு வந்தாலும் .....சமூகம் அவனை வாழ்த்த தயாராக இல்லை 

மாறாக அவனை வீழ்த்தவே முற்படுகிறது.


முந்தய காலகட்டங்களை பின்னோக்கி பார்த்தோமானால் பல அரசர்கள் 

,வள்ளல்கள் தங்களின் சொத்துகளை இழந்து சோற்றுக்கு வழியில்லாத 

நிலைக்கு வந்திருப்பது தெரிய வரும் ..


இந்த கால கட்டத்திற்கு பின் தான் 


" தனக்கு மிஞ்சிதான் தானம் தர்மம் "


என்ற பழ  மொழி வந்திருக்க வேண்டும் ....

தன்னை காத்துகொண்டு அதன் பின் மற்றவர்களையும் காக்க நினைப்பது 

சிறப்பு .மேலும் தன உணர்வுகளை உரிய நேரத்தில் வெளிபடுத்த தவறுபவன் 

வாழ்வில் பின்னுக்கு தள்ளபடுகிறான் 
                                                                                                             ( ஓசை தொடரும் )

Monday, July 9, 2012

நான் ஈ - ஞானி - ( சிரிப்பில் சிகரம் தொட வைத்த சிந்தனை துளி )


ஒரு திரைப்படம் இத்தனை எண்ணங்களை எனக்குள் உருவாக்கியது பெரும்      ஆச்சர்யம் 

பல தத்துவங்களும் தனித்துவங்களும் நிறைந்த அழகிய வெளிபாடு இக்கதை 
கதை நகர்த்துதல் என்பது ரசிகனின் விழிகளில் இருந்து அகலாமலே அவனை      அடுத்த கட்டத்திற்கு விழிப்புடன் நகர்த்துகிறது ......

அதை அழகாக நிகழ்த்தியிருக்கும் இயக்குனர் பாராட்டுக்குரியவர் ..........


இந்த படத்தின்  இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி, மகாதீரா (மாவீரன்) எனும் அரச கதையை கொண்ட திரைப்படத்தை உருவாக்கியதன் மூலம் தமிழ் திரை ரசிகர்களிடையே நன்கு அறிமுகாகிக்கொண்டவர்.

மேலும் கதையின் நாயகன் நாணி , நாயகி சமந்தா . வில்லன் சுதீப் இவர்களுடன் கடைசியில் சந்தானம் இணைந்து அசத்தலான நடிப்பில் மனதில் நிற்கிறார்கள் அகலாமல்


கதைச் சுருக்கம்: ஈ அளவு கதைதான் - 

தொழிலதிபர் சுதீப் ஒரு ப்ளேபாய் ( பெண்களுடன் மட்டும் விளையாடுபவர் ) , டொனேஷன் கேட்டு வரும் சமந்தாவுடன் விளையாட நினைக்கிறார் ; அதற்கு தடையாக, சமந்தாவின் எதிர் வீட்டுக் காதலன் நானி (நான் ஈ இவர்தான் - வெப்பம் மூலம் தமிழில் அறிமுகமான நடிகர்!). எரிச்சலாகும் சுதீப், நானியை நசுக்கிக் கொல்ல அவர் ஈயாக மறுபிறப்பெடுத்து, சுதீப்பை தீயாக பழி வாங்குகிறார்! 

ஆனால் பழிவாங்குதல் என்ற கோணத்தில் மட்டும் பயணிக்க முடியவில்லை 
சொகுசு பயணம்  மேற்கொண்டது போல,  ஒரு இன்பசுற்றுலாவை அனுபவித்தது போல அனைவரின் உள்ளமும் மகிழ்ச்சியில் ஒரு குழந்தையை போல துள்ளி குதித்து கொண்டிருந்தது  அரங்கில் ...........

இப்படி பட்ட திரைப்படங்கள் மன நோய்க்கான மிகச்சிறந்த மருந்து ..............

வாய்விட்டு சிரிச்சால் நோய் விட்டு போகும் ..........'' ஆனால் யாரும் அதற்க்கு தயாராக இல்லை அப்படியே தவறி அந்த செயல் நிகழுமாயின் அவன் கேளிக்குரியவனாக பார்க்கபடுகிறான் இப்படிபட்ட சூழலில் தன்னை மறந்து அந்த திரையரங்கின் இருண்மைக்குள் ஒரு பிரகாச ஒலி ஒலிப்பதை அனைவரும் வரவேற்று இருந்தனர் ...........அது அவர்களின் துள்ளலில் தெரிந்தது .........

கதையின் ஆரம்பத்தில் நாயகன் என்று நாம் எதிர்பார்க்கும் அத்தனை அம்சங்களுகுரிய ஒரு வில்லன் அறிமுகமாகிறார் தெலுங்கு திரை உலகில் கலக்கியவர் தமிழின் உச்சரிப்பு சற்று வேறுபட்டு தெரிந்தாலும் அவரின் நடிப்பில் பாவனைகளில் அதை நிறைவு செய்கிறார் .........

அவருக்கு பெரிய பாராட்டை சொல்லியே ஆகவேண்டும் படத்தின் முழு காட்சிகளை அவரே ஆக்கிரமித்து இருந்தார் ......வில்லனாக , காதல் காமம் நகைச்சுவை என்று என்று அனைத்தும் சரியான விகிதத்தில் கலந்து கொடுத்து இருக்கிறார் ..........

அடுத்த கதையின் முக்கிய நாயகன் ஈ தமிழ் திரை உலகில் விலங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து தேவர் பிலிம்ஸ் பல படங்களை வெளியிட்டு அவை பெரும் சாதனைகளை படைத்திருந்தாலும்  ........நம் அன்றாட வாழ்வில் பல முறை நம்மோடு பிணைந்து நமக்கு பெரும் தலை வலியை அவஸ்தையை தரக்கூடிய ஆனாலும் நம்மோடு எப்போதும் இருக்க கூடிய ஈ தான் கதையின் நாயகன் ........

மனிதனின் பரிணாமத்தின் பெரும் மாற்றங்களை நாம் மிகவும் எளிதாக ஏற்றுக்கொண்டு அடுத்த கட்ட நகர்வுகளில் பயணித்து கொண்டிருக்கிறோம் ஆனால் மேலை நாட்டினரை போல வீட்டு விலங்குகளை ஒரு சக மனிதனை போல பாவித்து அவற்றின் தேவைகளை கொடுப்பதில் நாம் தவறுகிறோம் பல நேரங்களில்  அப்படி இருக்க ஒரு ஈ இன் உடலில் புகுந்த இருப்பது காதலனின் ஆவி என்று அறிந்த பின் அதனோடு பேசுவதும் அதற்க்கு தேவையான வசதிகள செய்து அதன் மேல் காதல் கொள்ளும் நாயகியின் வெளிபாடு அருமை ..........

கதையின் நாயகன் இவர் இளம் நாயகன் தனக்கு ஒதுக்கப்பட்ட சில காட்சிகளில் மனதில் பளிச்சென்று பதிந்து  விடுகிறார் எதார்த்த நடிப்பு ,வழியும் புன்னகை அசைவுகளில் இசை மீட்டுவது போல காட்சிகளில் கச்சிதமாக பொருந்தி செல்கிறார் ...

கிரேசியின் ஒவொரு நகர்வும் ஓராயிரம் சிரிப்பு ஒலிகளை ஒலிக்க செய்கிறது ........

அரங்கு களையும் வேளையில் அதிரடி கரகோசத்தோடு  பெரும் சிரிப்பொலிக்க காரணம் சந்தானத்தின் கடைசி காட்சிகள் ..

இடை செருகல் போல ஒரு பத்ரன் வருகிறார் அவர் சொல்லி செல்லும் தத்துவம் நெருடல் என்றாலும் ........கவனிக்க படவேண்டியவைதான் "கருப்பு பெட்டி  எரியும் போது முகத்தில் கரியோடு என்னை பார்க்க வருவாய் "  என்று சொன்னவன் காற்று புகமுடியாத அறைக்குள் இறந்து போவது .......இயக்குனரின் எண்ணத்தின் வெளிபாடு .........மந்திரம் தந்திரம் என்பது ஒன்றும் இல்லை அனுபவம் மட்டுமே நம்மை முன்னோக்கி பயணிக்க வைக்கும் ................ஒருவன் எதை விதைகிரானோ அதை மட்டுமே அறுவடை செய்ய இயலும் என்பதை அழகாக விளக்கியிருக்கிறார் ....


"தெய்வம் நின்று கொள்ளும் 
அரசன் அன்றே கொள்வான்" என்பது போல நாம் செய்யும் செயல்களுக்கான பதில் வினைகள் அடுத்த நொடிகளிலே நமக்கு கிடைப்பது கண்கூடு .....

கதை பார்வையாளரின் மனதில் பல கோணங்களில் விரித்து சென்றாலும் படம் முழுதும் காட்சிபடுத்தபட்ட ஈ உடனான ஆட்டங்கள் நம்மை சிலிர்க்க வைக்கிறது அதன் கலாட்டாக்கள் பல விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது ......

சிறு துரும்பென எதையும் அலட்சியம் செய்துவிட முடியாது உலகில் உள்ள அனைத்து உயிருக்குள்ளும் ஒரு பிரமாண்டங்கள் ஒளிந்து இருக்கிறது ஓவொன்றும் ஒருபிரளயத்தை உருவாக்க கூடியது  .........

எது எப்படினாலும் ஈக்கள் இனி இந்த  படத்தை பார்த்த பின்பாவது மலத்தில் மேய்வதை விட்டு விட்டு மலரை நுகர கற்றுகொள்ளுமா ?


Friday, July 6, 2012

உள்ளத்தின் ஓசை - 2இசை வாழ்வில் அனைத்து தரப்பிலும் வரவேற்க்கபடுகின்ற ஓன்று ........

     ஜாதிமத பேதமின்றி சமத்துவ பந்தியிடும் வள்ளல் அது


நல்லவன் - கெட்டவன் , பணக்காரன் -  ஏழை , என்று  எந்தவித பாகுபாடும்

    பார்க்காமல் அனைவரையும் அரவணைக்கும் ஆத்ம நண்பன் ..........

    நம் எல்லோருக்கும் பிடித்த அந்த இசையும் ஓசையுடையது தான் ..


ஆனால் அந்த இசைக்கு நடுவே அமைந்திருக்கும் இடைவெளிகளில் இருக்கும்

   அமைத்திதான் இறைமை ......


அந்த அமைதியை நாம் பல நேரங்களில் உணருகிறோம் அப்போது நம்மால்

     பேச இயலாது ........வெளியே நடப்பதை உணர மாட்டோம் ........எதுவும்

     இல்லாத ஒரு அமைதி நிலைக்கு செல்லுவோம் ...............பேசும் போது  கூட இரண்டு சொற்களுக்கான ஒரு இடைவெளியில் ஒரு 

     ஓசையற்ற தன்மையை உணர முடியும் ...


ஒவொரு ஓசையிலும் இருக்கும் ஓசையற்ற நிலையை புரிந்துகொள்ள நமக்கு

     சில கால அவகாசங்கள் தேவைபடுகிறது .


அப்படிதான் தியானமும்

     தியானம் என்பது நாம் இதுவரை கற்றுக்கொண்ட தெரிந்துகொண்ட

     விசயங்களை வெளியேற்றுவது ..


"அதற்க்கு நம்மை தயார்படுத்த வேண்டும் என்றால் வெளியே நடக்கிற

     நிகழ்வுகளை புரிந்துகொண்டு நம்மை அதிலிருந்து துண்டித்துக்கொள்ள

     வேண்டும் ."


"தயிரிலிருந்து வெண்ணையை பிரித்தெடுக்க ஏற்ப்படும் கால

     அவகாசத்தை போல "   காத்திருப்பது அவசியம் தியானத்திற்கு .


                                                                                                             (ஓசை தொடரும் )

Thursday, July 5, 2012

உள்ளத்தின் ஓசை - 1

ஒரு மடாலயத்தில்  தலைமை குரு அவருக்கு கீழ் பல சீடர்கள் , அவர்களில்

மிகவும் வயதில் இளைய ஒரு சீடன் அந்த மடாலயத்தின் சில பொறுப்புகளை

கவனித்து வந்தான் .


"அங்கு வருகிற சீடர்கள் குருவிடம் தியானதை கற்பதைவிட அவரிடம் சில

விடுகதைகளை கூற சொல்லி அதற்க்கு விடை கேட்பதில் முனைப்பாக

இருப்பதை அவன் கவனித்து வந்தான் ."


 இந்த இளைய சீடனுக்கும் அந்த விடுகதை பற்றியும் தியானத்தை பற்றியும்

 கேட்க ஆவலாக இருந்தது ..நேரடியாக குருவிடம் சென்று எனக்கும்

கற்றுகொடுங்கள் என்று கேட்டான்'


அதற்க்கு குரு "" உனக்கு இன்னும் அந்த வயது வரவில்லை அது வரை

பொறுத்திரு என்றார் " ஆனால் அவனோ  அடம்பிடிக்கிறான் அதனால் குரு

ஒப்புக்கொண்டு ஒரு விடுகதையை முன் வைக்கிறார்.


"எனக்கு  இரண்டு கைகளின் ஓசை பற்றி தெரியும்

ஆனால் ஒரு கையின் ஓசை பற்றி சொல்லுகிறாயா ? என்று கேட்டார் .


சீடன் அவரை வணங்கிவிட்டு அறைக்குள் வந்து சிந்திக்கிறான் சில பறவைகள்

இசைப்பதை  கேட்கிறான் .


மறுநாள் குருவை பார்த்து  குரலில் இசைத்து காட்டி இதுதான் அந்த ஓசை

என்று சொல்லி அவரின் பாராட்டிற்காக காத்திருக்கிறான்

"இல்லை இல்லை என்று மறுத்துவிடுகிறார் "


சீடன் மீண்டும் அமைதியான இடத்திற்கு சென்று தியானம் செய்கிறான் ......

அவன் சித்திக்கும் போது  சொட்டு சொட்டாக நீர் விழும் சப்தம் கேட்டு அதுதான்

ஒரு  கை ஓசை என்று குருவிடம் சொல்லுகிறான் .அதையும் மறுக்கிறார் குரு.


ஒவொருமுறையும் பல வித சப்தங்களை கேட்டு வந்து சொல்லுகிறான் அவர்

எல்லாவற்றையும் மறுக்கிறார்......


"பத்தாவது முறையாக அவன் நிராகரிக்கப்பட்டபோது தான் மீண்டும்

தியானத்தில் அமருகிறான் அது உண்மையான தியானமாக மலர்கிறது அறிய

வேண்டும் என்ற ஆர்வம் கூட    அகண்டு சென்றது .


தியானம் தியானத்திர்காகவே   நிகழ்ந்தது அது வார்த்தைகளற்று உருவானது

மனத்திரையில் எந்த வித காட்சிகளும் உருவாகாத மௌன நிலையை

அடைந்தான் .


சப்தங்களைஎல்லாம் அவன் கடந்து சென்றான் அப்போது அவனுக்கு புரிந்தது

"ஒரு கையின் ஓசை " மௌன நிலை என்று


                                                                                                               (ஓசை தொடரும் )

Tuesday, July 3, 2012

வாய்மைமலர்களில் சுழலும் ஒரு வகை வண்டும் 
மலத்தில் சுழலும் ஒரு வகை வண்டும் 
ஒரு நாள் சந்தித்து கொள்ள நேரிட்டது 
சான வண்டு கேலியாகச் சொன்னது 

"எப்படியிருக்கிறாய் நீ ?  எனக்கு உன் பாட்டனாரையும் தெரியும்  அவருடைய பாட்டனாரையும் தெரியும் பாவம் நீங்கள் எல்லோரும் அல்பாயுசில் மறைந்து விடுகிறீர்கள் ...என் மாதிரியான கெட்டியான உடம்பும் வைரம் பாய்ந்த இறக்கையும் உங்களுக்கு இல்லை என்பதை நினைக்கையில் எனக்கு பரிதாபமாக இருக்கிறது என்று சொன்னது ."

மலர் வண்டு சொன்னது 
"மலத்தைச் சுற்றிச் சிரஞ்சீவியாக வாழ்வதிலும் 
மலரைச் சுற்றி சிலகாலம் வாழ்வதே சிறந்தது " என்று கூறிப் பறந்து சென்றது ......

உலகில் மலர்களை நுகர்ந்து அவற்றின் மகரந்ததுடன் பேசி , புதிய கனிகளை உருவாக்கும் உயர்ந்த மனிதர்கள் மரணத்தைப் பற்றி கவலைபடுவதில்லை அவர்கள்தான் சான்றோர்களாய் சரித்திரத்தின் ஏடுகளில் இடம் பிடிகிறார்கள் சமுதாயத்தின் முன்னேற்றத் தேருக்கு வடம் பிடிக்கிறார்கள்.

ஆகவே உன்னை விளக்க நீ முன்வரவேண்டும் அதற்க்கு உன்னை நீ உணரவேண்டும் அதற்க்கு வாய்மையால் மெய்யை உணரவேண்டும் .

புறத்தே உள்ள ஒளிகள் விரைவில் மங்க கூடியவை 
அகத்தே காணப்படும் இருள் மட்டுமே நிரந்திரமானது ..

அதனால்தான் நாம்  உருவாக்கும் இருள் அறைக்குள் இருக்கும் வெளிச்சத்தை வெளியே விரட்டுகிறோம் .காரணம் புற விளக்குகளின் வழிகாட்டுதலில் செல்லும் போது பல தடைகள் உள்ளன விழிகள் ஒளிகளை கண்டு ஒரு புள்ளியில் செயலிழக்கின்றன.

" எல்லா விளக்கும் விளக்கல்ல - சான்றோர்க்கு 
பொய்யா விளக்கே விளக்கு "

என்று வள்ளுவரும் இதைத்தான் குறிப்பிடுகிறார் ....

காரணம் வாய்மை என்பது யாரையும் புண்படாமல் பழுது படாமல் பார்த்துகொள்கிற இயல்பு 

சிலநேரம் பொய் கூட வாய்மையாகும் அதன் நோக்கம் யாரையாவது காப்பாற்றும் என்றால்.

இதையும் வள்ளுவர் ஒப்புகொள்கிறார் 

" பொய்மையும் வாய்மையிடத்து புரைதீர்த்த 
நன்மை பயக்கு மெனின் "

வள்ளுவர் மானிடத்தை தெய்வீகத்தை நோக்கி உயர்த்துகிற அற்புத உத்திகளை கையாள்கிறார்.

"வாய்மை எனபடுவது யாதெனின் யாதொன்றுந்த் 
தீமை யிலாத சொலல் "

ஆகவே கல்லில் வேண்டாத பகுதிகளை அகற்றி சிற்பம் ஆவதை போல சான்றோராக முயற்சி செய்து பார்க்கலாம் ..

                                                                                                                                                    (முயற்சி தொடரும் )