Monday, September 3, 2012

உள்ளத்தின் ஓசை - 15 ( சோதனை )



மனிதன் ஒரு அற்புத சக்தியின் சுரங்கம் .அவனால் முடியாதது என்பது எதுவும் இல்லை உலகில் . அவனுக்குள் இருக்கும் அற்புதங்களை அவன் உற்றுநோக்கவும் அவற்றை உணர்ந்து கொள்ளவும் அவன் முயலுவது இல்லை .

வாழ்க்கை அவனுக்கு எப்போதும் சில சோதனைகளை முன் வைத்து செல்கிறது அவற்றை தகர்த்து எறியும் திராணி அவனுக்குள் இருக்கிறதா ? என்பதே அந்த சோதனையின் நோக்கம் .....ஆனால் அவன் அதை தகர்த்து  எறிய முற்படுவதே இல்லை. சோதனைகளை தடை கல்லாக நினைத்து சோர்ந்து போகவே நினைக்கிறான் .

அந்த தடை கல்லை தகர்த்து தாண்டி வருபவன்  மட்டுமே சாதனையாளனாக வளம் வருகிறான் . "இளநீர் வேண்டும் என்று நினைப்பவன் நிச்சயம் தென்னை மரம் ஏற வேண்டும் . ஏறுவதற்கு சிரம பட்டு கொண்டு நாம் குட்டை தென்னைகளை உருவாக்குகிறோம் , அப்படி குட்டை தென்னைகளை உருவாக்கும் பொது  நமக்கு முன்பே இளநீரை வேறு யாராவது பறித்து சென்று விடுவார்கள். 

ஆகவே மரம் ஏற தெரியாதவர்களுக்கு இளநீர் கிடைப்பதில்லை மாறாக கொப்பரை தேங்காய்கள் மட்டுமே கிடைகிறது .வாழ்க்கை தென்னையை போலதான் அதன் உச்சியில் ஏற முயற்சி செய்யாதவர்கள் எப்போது காற்று வரும் ? இளநீர் எப்போது கீழே விழும் ? என்று காத்துக் கொண்டிருப்பார்கள்.

அவர்களுக்குத் தெரிவதில்லை. அப்படியோர் வேகமான காற்று அடிக்குமேயானால் அது இளநீரை மட்டும் உதிர்க்காது , மாறாக அந்த தென்னையையும் சாய்த்துவிடும் .........அதனோடு நாமும் சாய்ந்து விட கூடும் என்பதை. ஆகவே வாழ்கையை அதன் போக்கில் எதிர்கொள்ளுங்கள் கடந்து செல்ல ஆயத்தமாய் இருங்கள் .

( ஓசை தொடரும் )

13 comments:

செய்தாலி said...

வாவ் வாவ் ..ம்ம்ம்ம்
வைரச் சிந்தனையில் ஒளிவீசுகிறது
வாசிக்கப்டும் அகம்

சின்னதா சொன்னாலும் ம்ம்ம் ..சான்சே இல்லங்க
அற்புதம்ங்க

ஓசை தொடரட்டும்
செவி தாழ்த்தி நாங்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல உதாரணம்... நன்றி...

Anonymous said...

தென்னையுடனான சாதனை ஒப்பீடு
சாலப் பொருத்தம் . கட்டுரை
உங்களைப் போலவே 'சிக்' கென
அழகாக உள்ளது. தொடருங்கள் தோழி !

sury siva said...

மடுத்த வாயெல்லாம் பகடன்னா னுற்ற
விடுக்க ணிடர்ப்பா டுடைத்து.

அப்படின்னு ஒண்ணரை வரி லே வள்ளுவரு சொல்லிப்புட்டு போயிருக்காரே
அதுவும் இதே தாங்க...

என்னது !! பொருள் வேணுமா !! இந்தாங்க.. பிடிங்க..


மடுத்த வாய் எல்லாம் பகடு அன்னான் -
தடை ஏற்பட்ட விடமெல்லாம் பொறைவண்டி யழுந்தாது அதை இழுத்துச் செல்லும் எருதுபோல் எடுத்துக் கொண்ட வினையை விடா முயற்சியுடன் வெற்றியுறச் செய்து முடிக்க வல்லவனை ;

உற்ற இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து -
அடைந்த துன்பம் தானே துன்பப் படுதலை யுடையதாம்.

சுப்பு ரத்தினம்

Tamilthotil said...

அப்படி குட்டை தென்னைகளை உருவாக்கும் பொது நமக்கு முன்பே இளநீரை வேறு யாராவது பறித்து சென்று விடுவார்கள்.

அருமையான உதாரணம்.

அனைவருக்கும் அன்பு  said...

செய்தாலி ரசிப்பின் எல்லையில்
சுவாசிக்கபட்டு வெளியிடப்படும் காற்றை சுவாசிக்க முடிந்தது என்னால்
நன்றி நண்பா உங்கள் பாராட்டுக்கு

அனைவருக்கும் அன்பு  said...

தனபாலன் உங்களின் அங்கீரம் என்னை என் எழுத்தை வளபடுதும் உங்களையும் கூட

அனைவருக்கும் அன்பு  said...

தோழியின் ஒப்பிடீட்டில் அகம் மகிழ்ந்து போனது நன்றி தொடர்ந்து வாருங்கள்

Seeni said...

arumai!

பால கணேஷ் said...

குட்டைத் தென்னையில் பறிக்கும் காய்க்குச் சுவையிருக்காது. சிரமத்திற்குப் பின் மரம் ஏறி பறிக்கும் தெங்கிளநீர் தான் மிகுந்த சுவை தரும். அழகான ஒரு ஒப்பீட்டின் மூலம் கடின உழைப்பின் பின் வரும் சாதனைகளே சுவையையும் மகிழ்வையும் தரும் என்பதை உணர்த்தியது மிக அருமை.

Thozhirkalam Channel said...

நல்ல எழுத்தாழுமை,,, தொடருங்கள்,,

aavee said...

உள்ளத்தின் ஓசைகளை முதல் முறையாக கேட்கிறேன்.. தெளிவான நடை, எளிமையான எடுத்துக்காட்டு - உங்கள் எழுத்துக்கு வலிமை சேர்க்கிறது!!

இராய செல்லப்பா said...

ஏன் நிறுத்திவிட்டீர்கள்? இப்போதெல்லாம் இந்த வலைப்பூவில் புதிய பதிவுகள் இல்லையே! சுனாமியில் தென்னை மரங்கள் விழுந்துவிட்டனவா? –நியூஜெர்சியிலிருந்து கவிஞர் இராய.செல்லப்பா.