Monday, August 6, 2012

உள்ளத்தின் ஓசை - 6 ( கதவைத் திற )

மூங்கில்களை பார்க்கும் போது வெறும் மூங்கிலாக பார்க்க முடிவதில்லை 
துளைகள் இடபடாத ஒரு புல்லாங்குழல் போலதான் பார்க்க முடிகிறது .........

ஆனாலும் துளைகள் இல்லாததால் அவைகள் காற்றின் வருகையை எதிர்நோக்காமல் சிறகை  விரிக்காமலே  சிதைவுறுகிறது ....

மூங்கிலில் துளைகள் இல்லாததால் அதை வாசிப்பது சிரமம்  சாத்தியமும்  இல்லை , இதைப்போலத்தான் சில மனிதர்களும் இருக்கிறார்கள் இறுகிய இதயங்களுடன் கெட்டித்து  இரும்பு போல ,இவர்கள் ஒரு போதும் இலகாதவாறு பார்த்துகொல்கிரார்கள் ஒரு இயந்திரத்தை போல .

மூங்கில் புல்லாகுழல் ஆக வேண்டுமானால் நிச்சயம் துளைகளிட சம்மதிக்க  வேண்டும் . அவ்வாறு துளையிடும் போது ஏற்படும் சில வலிகளைப் பொறுத்துக்கொள்ள வேண்டும். சிலவற்றை  இழக்கத்  தயாராக வேண்டும் .

ஆனால் அந்த வலிகளை போக்கும் மகத்துவம் விரைவில் கிடைக்கும் ஒரு காற்று உள் நுழையும் போது இந்த பிரபஞ்சந்தையே உள் நுழைத்து இசையாய் பரிணமித்து அனைவரின் இதயங்களையும் கொள்ளை கொள்ளும் போது இழப்புகள் ஈடுசெய்யப்படும் , வலிகள் துடைக்கப்படும் .

புழு பட்டாம்பூச்சியாக உருமாறி வண்ணங்களோடு சிறகு விரித்து பறப்பது போல காற்று உள் நுழைந்து இசையாகி இறக்கை விரித்து பறக்கிறது . 

மனிதனும் இதற்க்கு தயாராக வேண்டும் .ஆனால் அவன் எப்போதும் தன கதவுகளையும் ஜன்னல்களையும் மூடியே வைத்திருக்கிறான் எங்கே களவு போய்விடுமோ என்று அச்சப்பட்டு தன சாளரங்களை எல்லாம் மூடி வைக்கிறான் அவனுக்குள் இருக்கும் பாதுகாப்பின்மை அவனை அடைத்து வைக்கவே வற்புறுத்துகிறது.

திருடர்களுக்கு பயந்து, கொசுக்களுக்கு பயந்து , சில கதவுகள் மூட படுகிறது ஆனால் பெரும் பான்மையான கதவுகள் சமூகத்தின் வரையறைகளுக்கு பயந்து மூடப்பட்டு உள்ளே அந்த மரபு வரையறைகளை தகர்த்து எரிந்து கொண்டிருகிறது.

கண்களுக்கு கடிவாளம் பூட்டியும் ,காதுகளுக்கு மூடிபோட்டும் நடப்பவர்களுக்கு உள்ளூர பயம், கண்களின் வழியாக , காதுகளின் வழியாக ஏதேனும் இதயத்திற்குள் நுழைந்து கருணைக் கசிவையும் , காதல் பிரளயத்தையும் ஏற்படுத்தி விடுமோ என்று அதனால்தான் கண்களை இமைகள் என்னும் மூடி கொண்டு மூடிக்கொள்கிறார்கள் 

ஆனால் இப்படி அடைத்து வைக்கும் பொழுது அதன் வெப்பத்தில் அவர்களின் ஆசைகள் ஆயிரம் குஞ்சிகளை பொறித்து சிறகு விரித்து பறக்க விடும் என்பதை அறிவதில்லை அவர்கள். அதன் இனப்பெருக்கம் காற்று வெளிகளில் நடைபெறுவதை விட பல மடங்காகும் என்பதையும் அறிய மாட்டார்கள் .

ஆகவே கதவை திறங்கள்-கண்களை திறங்கள் காற்றை - காட்சிகளை உள்ளே வர அனுமதியுங்கள் அவை உங்களுக்குள் புது உணர்வுகளோடு இசையை உருவாக்கும் அவற்றின் அதிர்வுகள் உங்களின் அசுத்தங்களை சுத்தமாக்கும் .

மலர்களின் நறுமணத்தை துவாரங்களின் படிய வைக்கும் ஒரு தாயை போல நம்மை தாலாட்டும் உறவுகளை நட்புகளை கைகோர்த்து நடை பயிலுங்கள் 

சிந்தனைகளை பரிமாறுங்கள் ,
அன்பை அடைமழை போல பொழியுங்கள் 
கோபத்தை சிக்கனமாய் செலவிடுங்கள் .
பண்பற்ற உள்ளம் வளர்வதை காண்பீர்கள் .....

கடல் போல அன்பை பெற 
உளியின் வலி தாங்க தயாராகுங்கள் ....

( ஓசை தொடரும் )

5 comments:

Seeni said...

unmai!

arumai!

abdulkader syed ali said...

இந்த
ஓசை ஒரு பெண்ணில் மட்டுமல்ல
பெண்ணை பிறந்த எல்லா பெண்மையிலும்
துடிக்கின்ற இதய ஓசை

ஒரு சிறு வருத்தம்
இந்த பெண்மையின் அக ஓசையை
ஒரு சிலர்தான் கேட்கிறார்கள்

அதை
வரிகளில் ஊருக்கே கேட்கச் செய்த
பெண்மைக்கு என் அன்புத் தோழமைக்கு நன்றி

ஓசை தொடரட்டும்

பால கணேஷ் said...

வலி தாங்கத் தயாராகுங்கள் என வலியுறுத்திச் சொல்கிறீர்கள். வலி தாங்கி துளை பெற்ற புல்லாங்குழல்களின் இசை மனதை மயக்கத்தானே செய்கிறது. அருமையான கருத்துக்கள். அன்பை அடைமழையெனப் பொழிந்து. கோபத்தை மட்டுறுத்தி சிந்தனைகளைப் பரிமாறினால் பண்பற்ற உள்ளமும் வளரும் என்கிற முத்தாய்ப்பு வரிகள் அருமையிலும் அருமை.

நிரஞ்சனா said...

அருமையான கருத்துக்கள். உங்களின் வார்த்தைகள்ல படிக்கறப்ப மனசுல நின்னுடுச்சுக்கா.

விமலன் said...

கதைவை திறந்து வைப்போம்,காற்று வரட்டும் கூடவே காதலும் என ஒரு கவிதை உண்டு,தங்களது படைப்பை படித்தவுடன் அது ஞாபகம் வருகிறது ,நல்ல படைப்பு.வாழ்த்துக்கள்.