Monday, August 13, 2012

உள்ளத்தின் ஓசை - 7 (புதிதாக்குதல் )மனித மனம் எப்போதும் மாற்றத்தை விரும்புகிறது என்று நமக்கு தெரியும் ஆனால் அந்த மாற்றம் ஆரோக்கியமாக இருக்க 
சில வழிமுறைகளை நான் சொல்ல விழைகிறேன்.

ஒரு ஓவியத்தை வாங்குகிறோம் அதை அறையின் முகப்பில் வைத்து ரசிக்கிறோம் சில நாள் கழித்து அந்த ஓவியம் கவனிப்பாரற்று சுவற்றின் ஒரு பாதியாகவே மாறிவிடுகிறது அவை நம்மை எந்த விதத்திலும் பாதிப்பதில்லை .

அப்படிதான் மனிதர்களும் புதிதாக பார்க்கும் போது ஒரு ஆர்வம் ஈர்ப்பு ஏற்பட்டு சந்தோத்தில் சிலாகிப்போம் கைகள் இடைவெளியில் காற்று நுழையா வண்ணம் பிணைந்து இருக்கிறோம் .ஒரு சில நாட்களிலே ஒரு தாவரத்தை போல உருமாரிவிடுகிறோம் உணவும், உறைவிடமும் கடமையும் மட்டுமே கண்முன் வருகிறது . தினசரி வேளைகளில் நம்மை  திணித்துகொள்கிறோம் அதன் பின் அந்த ஈர்ப்பு நம்மை ஒன்றும் செய்வதில்லை .

ஆனால் அப்படி இருக்க கூடாது ஒவ்வொரு நாளும் புதிதாய் மாறவேண்டும் அகமும் புறமும் புதிதாக மாற்றப்பட்டு நம்மை நாம் ஈர்க்கனும் அப்பொழுதான் எதிரே இருப்பவர் எப்போதும் கைகோர்த்து நடப்பார் நம்முடன். இங்கு எதிரே இருப்பவர்  நம் மனதிற்கு பிடித்தவர் .

எந்த நேரமும் எதையாவது செய்ய வேண்டும் என்று திட்டம் போடும் மனிதனின் மனம் ஒரு கிடங்கு போல இருக்கு பல சுமைகளை சுமந்துகொண்டு அழுக்கேறி வெளிச்சம் குறைந்து ஒரு சூனியத்தின் கரங்களை போல இருக்கிறது .

இதற்க்கு நேர் மாறாக பெயரும் புகழும் வேண்டி கதவை அகல திறந்து வைக்கிறார்கள் சிலர் அவ்வாறு திறந்து வைக்கும் போது  புகழுடன் சேர்ந்து அவப்பெயர்களும் நிறைய வந்து விழுகிறது .

இப்படி அல்லது அப்படி என்று இல்லாமல் மனதை சமநிலையில்  ஒரு கண்ணாடியை போல வையுங்கள் .

கண்ணாடி யாருடைய உருவத்தையும் தக்கவைத்து கொள்வதில்லை அப்படி தக்கவைத்துகொண்டால் அது புகைபடமாகிறது .

ஆகவே தினமும் ஒரு புதிய மனுசியாக உருமாறுங்கள்  அப்போது உலகம் உங்களை உற்று நோக்கும். 

இருக்கிறோம் என்பதை அடிகடி நினைவு படுத்த தவறினால் இறந்தவர்கள் வரிசையில் இணைக்கபட்டுவிடும்வோம் .


( ஓசை தொடரும் )

5 comments:

கோவை நேரம் said...

இதை எங்கயோ பார்த்த படித்த மாதிரி இருக்கே,,,

அ .கா . செய்தாலி said...

அற்புதமான
ஒரு விஷயம் சொல்லபட்டு இருக்கிறது

இரண்டுமுறை வாசித்தேன்
அதில் ஒளிந்து இருதது
ஒரு தேடல்

சிந்தனை மற்றும் உள்ளத்தின்
நூலாம்படைகளை தன் மென் சத்தம் கொண்டு
சுத்தம் செய்கிறது இந்த ஓசை

தரமுள்ள நல் சுவைகளை கொடுங்கள்
சுவைக்க பசியுடன்
நாங்கள்

தொடரட்டும் ஓசை

கோவை மு சரளா said...

இரண்டுமுறை வாசித்தேன்
அதில் ஒளிந்து இருதது
ஒரு தேடல் // படைப்பதை விட பெரியது உணர்தல் .........நிறைவு பெறுகிறது ஒவ்வொருமுறையும் நண்பனின் சுவாசிப்பில் .......நிச்சயம் சிறந்த கருத்துகளை தர விரக்குகிறேன் மனதின் மறைவிடத்தில் இருந்து

பால கணேஷ் said...

மனத்தை சமநிலையில் வைக்கும் தன்மை கைவரப் பெற்றுவிட்டால் மனிதம் தழைத்துப் பெருகுமே. புகழ். பணம் ஆகியவைகளினால் ஏற்படும் கொந்தளிப்புகள் கொஞ்சமா என்ன? மிகவும் சிந்திக்க வைத்து, அதனாலேயே மகிழ்வு கொள்ளவும் வைக்கிறது உங்களின் படைப்பு. தொடருங்கள் தோழி. தொடர்கிறேன் நானும்.

Athisaya said...

ஆழமான அற்புதமான விடயம் சொந்தமே!முதலில் வாழ்த்துக்கள்.நானும் இதை அனுபவித்ததுண்டு.மனம் லேசாகி வாழ்வில் விறுவிறுப்பு பற்றிக்கொள்ள நடுவுநிலைமை அவசியம்.

ஓசை தொடரட்டும் சொந்தமே.காத்திருக்கிறேன்.அன்புடன' சந்திப்போம் சொந்தமே!