Thursday, August 2, 2012

வெண்ணை பிறந்த விதம்


வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள் 

வெண்ணை பற்றி ஒரு முன்னோட்டம் , 
கண்ணனுக்கு பிடித்தது, 
ஆஞ்சநேயருக்கு சாத்துவது ,
வயிற்று புன்னை ஆற்றும்  மருத்துவம் கொண்டது 
வெள்ளையும் மஞ்சளும்  கலந்த தங்க நிறத்தில் இருக்கும் 

பாலை நன்றாக காய்ச்சி ஆறவைத்து தயிராக்க வேண்டும் பின் அந்த தயிரய் 
கடைந்தால் நமக்கு வெண்ணை கிடைக்கும் என்பது பொதுவாக நாம் அறிந்த 
விசயங்கள் ஆனால் அந்த பால் தயிரான பின் அதை கடைந்து வெண்ணை 
ஆகுவதற்கு முன் சில முக்கிய விசயங்களை நாம் உற்று நோக்க வேண்டியிருகிறது.

தயிர் கடையும் நேரம் 
எல்லா நேரங்களிலும் தயிராய் கடைந்தால் வெண்ணை கிடைபதில்லை 
பிரம்ம முகூர்த்தத்தில் கடைந்தால் மட்டுமே வெண்ணை கிடைக்கும் 
இதை நாம் சங்க இலக்கியங்கள் நமக்கு எடுதுரைகின்றன

வைகறை பொழுதில் ஆய்ச்சியர் மிகவும் சுறுசுறுப்பாக செயல்படுவர். 
இரவு இருள் புலர்ந்து விடியற்காலையின் ஆரம்பத்தில் மகளிர் விளாம்பழத்தின் 
மணம் கொண்ட பானையின் கண் வெண்ணை பெரும் பொருட்டு மத்தினால் 
தயிர் கடைவர் இதை கயமனார் என்னும் புலவர் கீழ்வருமாறு குறிப்பிடுகிறார்.

"விளாம்பழம் கமழும் கமஞ்சூற் குழிசிப்
பாசந்த தின்ற தெயகால் மத்தம்
நெய்தெரி இயக்கம் வெளி முதல் முழங்கும்
வைபுலர் விடியல்" ( நற்றிணை : 12:1 -4 )

இதன் மூலம் சுடு மண் பானைகளில் வெண்ணை கடைந்தால் கடைந்தால் விளாம்பழ வாசம் வரும் என்பதை அறிய முடிகிறது 

மேலும் மண்ணால் செய்து சுடபட்ட குடத்தில் உள்ள தயிரை வெயில் வெம்மை விலகும் பொழுதில்  கடைந்தால்  திரளாது. வெயிலின் வெம்மை இல்லாத அதிகாலையில் கடைந்தால் வெண்ணை திரளும் என்கிற மாபெரும் உண்மையை நற்றினை பாடல் வழி காண முடிகிறது. 

" சுடுமண் தசும்பின் மத்தம் தின்ற 
பிறவா வெண்ணை " (நற்றிணை - 84: 6-7) 

என்கிறார் பாலை பாடிய பெருங்கடுங்கோ , இந்த காரணத்தினை நன்கு உணர்ந்த ஆய்ச்சியர் அதிகாலையில் மத்தின் ஓலி தெறிக்க தயிர் கடைகிறார்கள் இதை " மத்து ரரியமனை " என்று 
பதிற்று பத்து குறிப்பிடுகிறது. ஆயர் மகளிர் கடைந்த அந்த தயிரில் நுரையாய் மிதக்கும் வெண்ணையின் அழகை கூட பாலைகொத்தனர் அகநானூற்று பாடலில் அழகாக குறிப்பிடுகிறார். 

" பால் கடை நுரையின் பரூஉ மிதப்பு" ( அகநானூறு :224:6) 

 இந்த விசங்களை பார்கையில் நம் முன்னோர்களின் திறமைகளையும் இயற்கையோடு  அவர்கள் இயைந்து வாழ்ந்ததையும் அறிய முடிகிறது. 

நாம் அன்றாட வாழ்வில் உபயோகிக்கும் அனைத்து பொருட்களிலும் ஒரு மருத்துவ குணம் இருப்பதை நம் முன்னோர்கள் அறிந்து வைத்திருந்திருகிறார்கள் ,அதை எந்த முறையில் உன்ன வேண்டும் எந்த நேரத்தில் உன்ன வேண்டும் அதன் அளவு எவ்வளவு? என்றெல்லாம் பெரும் ஆராய்ச்சிக்கு பின்பு நமக்கு அறிவுறுத்தி சென்று இருக்கிறார்கள் .

அவர்கள் கண்டு பிடித்ததை சரியாக உபோயோகிக்க நம்மை விட வேற்று நாட்டவர்தான் ஆர்வம் கொள்கிறார்கள் ..

அருகில் இருப்பதை எப்போதும் நாம் அறிவதில்லை தொலைவில் இருப்பதை தேடுவதிலேயே தொலைத்து  கொண்டு இருக்கிறோம் நம் நேரங்களை.

இனியாவது அருகில்  இருப்பதை அலட்சியமாய் பார்க்காமல் ஆச்சர்யமாய் பார்க்கலாம் .

4 comments:

பால கணேஷ் said...

தயிரில் வெண்ணை கடைவதன் பின்னால் இவ்வளவு விஷயங்கள் இருக்கின்றனவா? ‘முன்னோரெல்லாம் மூடர்களல்ல...’ என்று உரத்துக் குரலெழுப்பி பாடத் தோன்றுகிறது. புதிய தகவல்களுடன் இலக்கியச் சுவையையும் ரசிக்க முடிந்ததில் கூடுதல் மகிழ்ச்சி தோழி. அருமை.

கோவை மு சரளா said...

நண்பர் பாலகனேஷ் அவர்களின் வருகை இத்தளத்திற்கு சிறப்பை சேர்க்கிறது நன்றி நண்பா

நிரஞ்சனா said...

ஹையா... இங்கயும் வந்திட்டேன் நான். பதிற்றுப் பத்து. நற்றிணைல்லாம் நான் படிக்க வாய்ப்பேயில்ல... ஆனா உஙக மூலமா அதோட கருத்துக்களைத் தெரிஞ்சிக்க முடிஞ்சதுல ரொம்ப ரொம்ப சந்தோஷம். தொடர்ந்து எழுதுங்க. தவறாம படிச்சு என் தமிழறிவைக் கொஞ்சம் வளர்த்துக்கறேன்.

செய்தாலி said...

வெண்ணை பற்றிய சிறப்பான விஷயம்
சிறப்பான பொருளும் கருத்தும்
இலக்கிய சுட்டி காட்டலும் அருமை
ம்(: தொடருங்கள் தோழி