Saturday, August 18, 2012

உள்ளத்தின் ஓசை - 10 ( மரணம் )நம்மை பற்றிய தேடலின் தொடக்கமாக பதற்றத்தை தொடர்ந்து நமக்குள் பயம்  ஆட்கொள்கிறது.
மரணத்தை பற்றிய பயம் !

மரணம் என்ற சொல்லே நமக்குள் பெரும் பயத்தை உருவாக்குகிறது 

"அடி வயிற்றில் அமிலம் சுரக்கிறது 
இதயத்தின் துடிப்பு அதீகரிகிறது 
வயிற்றுக்கும் தொண்டைக்கும் இடையே 
ஒரு உருளை உருண்டு தொண்டையை அடைத்துகொல்கிறது 
உடல் கொதிக்கிறது "

இந்த நிலை காதலுக்கு மட்டும் இல்லை மரணத்திற்கும்  உருவாகிறது. 

மரணத்தை பற்றி உங்களிடம் ஒரு விளக்கம் சொல்லுகிறேன் 

அதாவது என்றாவது ஒருநாள் நாம் இல்லாமல் போய்விடுவோம் என்ற நினைப்பு நம்மை பயங்கரமாக பயமுறுத்துகிறது .

அதை பேசவே பயபடுகிறோம் ...அப்படி ஓன்று நிச்சயம் நடக்கும் என்று அறிந்த பின்னும் ஏதாவது ஒன்றிக்கு நம் பெயரை சூட்டி நமக்கு பின்னும் நாம் வாழ வழி செய்கிறோம் .

இந்த மரண பயத்தில் இருந்து  நம்மை விடுவிக்க  சமூகம் செய்த தந்திரம் தான்  புறதேடல்கள்.

புறதேடல்களில் சின்ன சின்ன சந்தோசங்களில் மனம் துள்ளி குதிக்கிறது அதில் மனதை  நிறைத்துகொள்கிறோம்   மரணத்தின் பயத்தை உள்ளே வரவிடாமல் செய்கிறோம் .

மது ,மாது , காதல் என்று ஏதாவதொரு மகிழ்ச்சி தரும் செய்கைகளை தொடர்ந்து செய்ய தன்னை  நிறைத்துகொள்ள  முற்படுகிறோம் 

"வெளியே தேடு -உலகத்தை அறிந்து கொள் 
உள்ளே தேடு - உன்னை அறிந்துகொள் "

இந்த வார்த்தைகளை உணருங்கள் தன்னை சரியாக புரிந்துகொள்ளாதவன் வேறு ஒன்றரை எப்படி புரிந்துகொள்வான் . தன் கைகளின் நீளம் உணராதவன் பிற பொருள்களின் நீளத்தை எப்படி அளவிடுவான்.நம்மில் பலர் இப்படிதான் இருக்கிறோம் .

வெளியே கொட்டி கிடக்கிற அதிசயங்களை காட்டிலும் உள்ளே நிறைந்திருக்கிற அபூர்வங்கள் அதிகம் .

விரதம் இருப்பவர்களை நான் கவனித்து இருக்கிறேன் உடலை வருத்தி கொள்வது வாழ்வில் ஏதேனும் அடைந்து விட மாட்டோமா என்கிற ஏக்கத்தில் தான் அது இறைமை இல்லை அவர்கள் எண்ணம் முழுதும் எப்போது விரதம் முடியும் ? எப்போது உணவு நேரம் வரும் என்றே தியானிகிறார்கள். ஆகவே இந்த எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்ட ஒரு தேடுதலை பற்றிதான் நான் சொல்ல வருகிறேன் 

தேடுதல் என்பது இழப்பு .........நம்மை இழப்பது 

"நான்" என்கிற நம்மை இழப்பது 

நமக்குள் நிறைந்து  இருக்கிற சமூகம் திணித்து இருக்கிற குப்பைகளை எல்லாம் தூக்கி எரிந்து விட்டு கனமின்றி ,வெறுமையாய் நிற்பது .

அந்த நொடி நாம் இலகுவாகிவிடுவோம் காற்றோடு கலந்து நிற்போம் அதுதான் உன்னதம் .

அதை பெறுவது சுலபம் இல்லை நமக்குள் இருப்பதை தொலைப்பது  ,நாம் அறிந்ததை மறப்பது என்பது ஒரு தியானம் அந்த தியானத்தை அடையும் போது ஞானத்தை பெறுவோம் அந்த ஞானம் இந்த உலகில் இருந்து தள்ளிநின்று உலகை பார்க்க செய்யும் அதற்கு நாம் செய்வது தேடாமல் இருப்பது .

தேடாதிருக்கும் நிலையை தேட முற்படும்போது தேடியது எல்லாம் கிடைகிறது !.
எனவே தேடுவது என்பது தேடாமல் இருப்பது 

( என்ன நண்பர்களே என் எண்ணத்தின் வெளிபாடு உங்களுக்கு புரிகிறதா ? ஆழ்ந்து யோசியுங்கள் நிச்சயம் புரியும் நான் என்பது முற்று பெறுகிறது )


( ஓசை தொடரும் )

7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நிறைவான முடிவு சகோ... வாழ்த்துக்கள்...

" தங்கத்தை பூட்டி வைத்தாய்... வைரத்தை பூட்டி வைத்தாய்... உயிரை பூட்ட எது பூட்டு...?

குழந்தை, ஞானி இந்த இருவரும் தவிர...
இங்கு சுகமாய் இருப்பவர் யார் காட்டு...?

ஜீவன் இருக்கும் மட்டும் வாழ்க்கை நமக்கு மட்டும்...
இதுதான் ஞான சித்தர் பாட்டு...!

ஜீவன் இருக்கும் மட்டும் வாழ்க்கை நமக்கு மட்டும்...
இதுதான் ஞான சித்தர் பாட்டு...!

இந்த பூமி சமம் நமக்கு... நம் தெருவுக்குள் மதச்சண்டை ஜாதிச்சண்டை வம்பெதுக்கு...? "

படம் : படையப்பா

பாடல் வரிகள் : வைரமுத்து அவர்கள்

நன்றி...

பால கணேஷ் said...

நாம் மனதுக்கு இன்று சிவப்பு நிறத்தைப் பற்றி நினைக்காதே என்று உத்தரவிட்டால் அன்று முழுவதும் சிவப்பு நிறமே கண்ணில் படும் விந்தை நிரம்பியது மனம். அதனால் தேடுதல் என்பது தேடாமல் இருப்பது என்கிற உஙகளின் வார்த்தையை நன்றாய் விளங்கிக் கொள்ள முடிகிறது தோழி. என் அழுத்தமான கை குலுக்கல் உங்களுக்கு.

மரணம் என்பது எப்போதும் நிகழும். அது எப்போது வந்தாலென்ன. நம் கடமையையை நாம் விரும்புவதை ஈடுபாட்டுட்ன் செய்வோம் என்ற எண்ணத்தை ஆழப் பதித்து விட்டால் பின் எதுவும் இலகுதான்.

-என் இந்தப் புரிதல்கள் சரிதானா என்பதை நீஙகள்தான் சொல்லணும்.

கோவி said...

மரணம் என்பது உலகம் நமை உற்று நோக்கும் தருணம். நல்லவனா கெட்டவனா என உலகம் இறுதியாக ஒருவனை தரம் உயர்த்தி பார்க்கும்.பின்னர் அதுதான் அவனது வரலாறு. நல்ல நிலையிலான மரணத்திற்க்குதான் நாம் இறைவனை வேண்ட வேண்டும்.. நீங்கள் சொன்னது போல் இடையில் வருபவை எல்லாமே மரணத்தை சற்றே நம் மனதில் இருந்து விலக்கி வைக்கிறது.. அதற்குள்தான் எத்தனை ஆட்டம் மனிதனுக்கு.. மிக அருமையான பதிவுகள் இதேபோல் தொடர வாழ்துக்கள்..

Athisaya said...

வெளியே கொட்டி கிடக்கிற அதிசயங்களை காட்டிலும் உள்ளே நிறைந்திருக்கிற அபூர்வங்கள் அதிகம் ...

எத்தனை மேன்மையான கருத்து.

தேர்ந்த ஒரு ஞானி போல பேசுகிறாள் என் அக்கா!முத்துமத்தாய் அத்தனை வரிகளும் அவ்வளவு தீர்கமாய் இருக்கிறது.
புரிகிறது சொந்;தமே!மரணம் கூட ஒருவித இரகுபடுத்தல் விடுதலை முழுமை தான்.

வாழ்த்துக்கள் அக்கா.இப்படிப்பதிவுகளை பார்க்கையில் பதிவுலகில் இருப்பதற்காண் பெருமைப்பட்டுக்கொள்கிறேன்.வாழ்த்துக்கள் சொந்தமே!சந்திப்போம்.

Seeni said...

baalan sako!

eppudi....

Seeni said...

nalla aazhamaana ennangal!

குருச்சந்திரன் said...

மரண பயத்திடம் இருந்து தப்புவதற்காகத்தான் மனிதன் கடவுளையே படைத்தானோ
என்று தோன்றுகிறது ! நான் என்ற சுயத்தின் அறிவியல் தான் கடவுளாக இருக்க
முடியும் என்றும் தோன்றுகிறது. அந்த அறிவியல் என்னவாக இருக்க முடியும் ?
இப்போது நான் ஒரு தேநீர் கடையில் அமர்ந்திருக்கிறேன் எனில், தேநீர்
கடையில் அமர்ந்துள்ளேன் என்ற உணர்வைத் தருவது மூளைதான். மூளைக்குள்
பதிவாகியுள்ள செய்திகள், ஞாபகங்கள், முடிவுகள், தான் நம்மை நமக்கு
உணர்த்துகின்றன.

ஆனால், இந்த மூளை இல்லாமலும் நான் என்ற உணர்வு இருக்கவே செய்கிறது.
பக்கத்து வீட்டுக்காரனுக்கும் நான் என்ற உணர்வு இருக்கிறது ! அவனுடைய
மூளையையும், என்னுடைய மூளையையும் தற்காலிகமாக ஓய்வுக்கு உட்படுத்தி
விட்டு ஆய்ந்தால், எனக்கும் அவனுக்கும் உள்ள " நான் " ஒரே மாதிரித்தான்
இருக்குமோ ? அந்த ஒரே " நான் " தான் பிரிந்து பிரிந்து பல்வேறு
உயிர்களுக்குள்ளும் வியாப்பித்திருக்கிறதோ ? கொஞ்சம் சுற்றுகிறது !

கஞ்சாவின் போதை = பரவச நிலை ! என்று ஒரு அபிப்பிராயம் உள்ளது ! ஒருவேளை
கஞ்சா பரவச நிலையை அடைவதற்கான குறுக்கு வழியாக இருக்கலாம் ! எது
எப்படியோ, மனிதனால் அந்த உண்மையைக் கண்டறியவே முடியாது என்பது தான் உண்மை
! சரளா மேடம் அந்த உண்மையை உணர்ந்து உணர்த்துவார்களா என்று பார்ப்போம் !