Tuesday, August 21, 2012

உள்ளத்தின் ஓசை - 11 ( அறிவு )

நாம் என்பது இங்கு அறிவைத்தான் முதன்மையாக பொருள் கொள்ளுகிறது 

அறிவு என்பது மூளையின் கட்டளைகளை உள்வாங்கி வெளியிடுவது

நிறைய விசயங்களை சேகரிப்பது என்றுதான் நாம் நினைத்துகொண்டு இருக்கிறோம் .

அறிவு மட்டுமே நிரந்திரம் அறிந்து கொள்வதோடு உலகம் முடிந்து விடுகிறது என்று நினைக்கிறோம் .

அதனால்தான் ஒரு புத்தகத்தில் இருந்து வேறு ஒரு புத்தகத்திற்கு தாவுகிறோம் ,ஒரு நூலகத்திலிருந்து வேறு ஒரு நூலகத்திற்கு தாவுகிறோம் .

ஏனென்றால் நாம் அறிந்து கொள்ள அறிந்துகொள்ள ,நமக்கு நிறையத் தெரியும் என்கிற எண்ணம் ஏற்படுகிறது .ஏதாவது தெரியாமல் விளிகின்றபோது அவமானபடுகிறோம். அந்த அவமானத்தை போக்குவதற்கு இன்னும் அறிந்து கொள்ள ஆசைப்படுகிறோம் .

'எனக்கு தெரியாது ' என்று சொல்வதர்க்க் கூச்சப்படுகிறோம் "எனக்கு எல்லாம் தெரியும் " என்று காட்டிக் கொண்டு பெருமைபடுகிறோம்.நம்மை நான்கு பேர் புத்திசாலி , அறிவாளி என்று சொல்லும்போது ,எதைப்பற்றியாவது பேசும்போது மற்றவர்கள் ஆர்வமாக பார்க்கும்போது நாம் சொல்வதைக் கேட்டு கைதட்டும்போது மகிழ்ச்சி ஏற்படுகிறது .அதை தக்க வைத்துகொள்ள விரும்புகிறோம்.

அதன் காரணமாக மேலும் படிக்கிறோம் ,புத்தக புழுவாகவே மாறிவிடுகிறோம். எதை பார்த்தாலும் அலசி ஆராய முற்படுகிறோம் .மூளையின் மூலம் அனைத்தையும் அறிந்துவிடலாம் என்று திடமாக நம்புகிறோம்.அந்த இடத்தில்தான் நம் அறிவு நமக்கு எதிராக செயல்படுகிறது .

இவாறு அறிவை மட்டுமே ஆயுதமாக கொண்டு இருப்பவர்கள் அதற்க்கு அடுத்த நிலைக்கு செல்ல தயங்கும் போது அந்நிலையில் இருந்து கீழே வரும்போது அதை ஏற்றுகொள்ள முடியாமல் தடுமாறுகிறார்கள் வாழ்வில் விரக்கிதியை அடைகிறார்கள் .

எப்போதுமே பாத்திரத்தை காட்டிலும் அதிலிருக்கிற பொருள் முக்கியமாக சொல்லபடுகிறது அப்படிதான் அறிவை முக்கியமாக நினைக்கிறோம் .

ஆனால் வாழ்கையை பொறுத்தவரை பாத்திரத்தின் உள்ளே இருப்பதைவிட பாத்திரத்தின் தன்மையை பொருத்து அதன் உள்ளிருக்கும் பொருள் தீர்மானிக்க படுகிறது .

ஒரு விதையை பூமிக்குள் விதைக்கும் போது சில சமயம் அழுகிவிடுகிறது .

அப்போது நிலம் முக்கியமாக இருக்கும். அப்படிதான் நாம் அறிவை மட்டுமே கொண்டு நம்மை தீர்மானிக்க முற்படுகிறோம் அது தவறு .

அதையும் தாண்டி அன்பு மனிதாபிமானம் கருணை காதல் நேசம் பாசம் இவைகளை கொண்டுதான் உலகம் மனிதனை எடைபோடுகிறது .

"அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையோடு 
ஐயிந்து சால் பூன்றிய தூண்" 

வள்ளுவர் கூட அன்பு நாண் ஒப்புரவு கருணை வாய்மை,என்ற மேற்சொன்ன எல்லாவற்றையும் கொண்டதுதான் வாழ்க்கை என்னும் தூண் என்கிறார் .

ஆகவே ஒரு தூண் என்பது வெறும் மணலால் மட்டுமே கட்டமுடியாது ,சிமென்ட் ,ஜல்லி ,மணல்,நீர் கல் என அனைத்தும் சில அளவுகளில் கலந்து கட்டினால் மட்டுமே வலிமை மிக்க தூணாக இருக்கும்.


(ஓசை தொடரும் )

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

முடிவில் அருமையாச் சொல்லி விட்டீர்கள்...
தொடருங்கள்... பாராட்டுக்கள்... நன்றி...

அ .கா . செய்தாலி said...

சிறப்பான கண்ணோட்டம் தோழி
தொடரட்டும் ஓசை

கோவி said...

அருமை, அருமையா சொல்லிடீங்க..

Seeni said...

azhakaana pakirvu!

பால கணேஷ் said...

உண்மைதான். அறிவு என்பதும் மனம் என்பதும் வேறு வேறா இல்லை ஒன்றானவையா என்று பல சந்தர்ப்பங்களில் எனக்கும் பட்டிமன்றம் நிகழ்ந்ததுண்டு. அறிவு என்பது மூளை எனக் கொண்டால் அன்பு, பாசம், இரக்கம் போன்ற உணர்வுகளைச் சுரக்கச் செய்யும் மனம் என்பது தனியானதா, மூளையின் உத்தரவின்படி செயல்படுபவை அவை எனில் மூளைதான் மனமா- இப்படியெல்லாம் விவாதித்துக் கொண்டதுண்டு. உங்களின் இந்தக் க்ட்டுரை எனக்கு வேறொரு பரிமாணத்தைக் காட்டியிருக்கிறது. நன்றிம்மா.