Wednesday, August 22, 2012

உள்ளத்தின் ஓசை - 12 (ஈர்ப்பு )நான் என்பதன் அர்த்தம் பரவி கிடக்கிறது இதில் எதை சரியாக பொருத்துவது என்பது நம்மிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறது .

பொதுவாக நம்மை விட பிரபலாமான ஒரு நபரை பார்க்கும் போது நாமும் அவரை போல பிரபலமாக வேண்டும் என்று ஆசைபடுகிறோம் .

ஓர் ஆசையில் இருந்து இன்னொரு ஆசைக்கு செல்கிறோம் இது ஒரு நீருக்குள் ஏற்படும் சலன வட்டங்களை போல விரிந்துகொண்டே செல்கிறது.

ஆறுகள் கடலில் விழுந்து பெரிதாவதை போல நம் ஆசைகளும் , எண்ணங்களும் சங்கிலிப் பிணைப்புகளை விரிந்துகொண்டே போகின்றன. இது எப்போதாவது நின்று விடும் என்று எதிர்பார்த்துதான் ஆரமிக்கிறோம் . ஆனால் அது ஒருபோதும் நிற்பதில்லை.

இந்த ஆசை ஒரு வித ஈர்ப்பு அது யாரிடம் வேண்டுமானாலும் ஏற்படலாம் ,குடும்ப நண்பர்கள் , அறிமுகம் இல்லாத நபர்கள் என்று நம் காலத்தை இந்த மனிதர்களே ஆக்கிரமித்துகொல்கிரார்கள் . அதிக காலம் நாம் இவர்களுடனே நம் சக்தியை விரயமாக்குகிறோம் .

நாம் யாரிடம் பிடிப்பு வைத்திருகிரோமோ  அவர்கள் விலகும் போதெல்லாம் நாம் விக்கித்து நிற்கிறோம் ,சோர்ந்து துவண்டு போகிறோம் நம்மில் ஒரு பகுதி கரைவது போல உணர்கிறோம் .அதிலிருந்து மீண்டு வர இன்னும் பல காலங்களை செலவிடுகிறோம் .

அதனால்தான் நம்மால் அடுத்த கட்டங்களை பார்க்க முடிவதில்லை அதற்குள் நம் ஆயுள் முடிந்து விடுகிறது அதுவும் நிராசை என்ற மனநிலையோடு .

ஆகவே இந்த ஈர்ப்பை ஆசையை வெல்ல நாம் துணிய வேண்டும் எதுவும் நிரந்திரம் இல்லை .இன்று கிடைப்பது நாளை நிச்சயம் அதே சுவையுடன் இருக்காது என்ற மனநிலைக்கு நம்மை தயார்ப்டுதிகொள்ள வேண்டும் .

எதிர்வினைகளை ஏற்க்க முன்பே நாம் தயார் நிலையில் இருக்கும் போது அவை நம் கண் முன் ஒரு தூசி போல தெரியும் .அப்படி இருக்கையில் நம்மை எப்படி அது தாக்கும் ,நாம் ஏன் சோர்ந்து போக வேண்டும் .

இருக்கும் வரை இருக்கட்டும் போகும் போது போகட்டும் என்ற சமநிலைக்கு உங்கள் மனதை கொண்டு வாருங்கள் இது கடினம் இல்லை பழக பழக பாறையும் உருகும் ஆகையால் மனதை சமமாக நிலைகொள்ள முயலுங்கள் நிச்சயம் எந்த இடத்திலும் சறுக்காமல் நிற்கும் .


( ஓசை தொடரும் )

7 comments:

ezhil said...

உங்களின் பதிவை படித்தவுடன் என் நினைவிற்கு வந்த வரிகள்
ஆசையே அழிவிற்கு காரணம்
ஆசையை வெல்ல வேண்டும்-புத்தர்

அவர் சொல்லி நூற்றாண்டாகியும் அதை வெல்ல இன்னமும் வழி இல்லை. முற்றும் துறந்தோம் என்பவருக்குக் கூட ஏதோ ஒரு ஆசை இருக்கத்தான் செய்கிறது.

இன்னொரு கோணம் ஆசை இல்லையேல் வாழ்வே இல்லை. முன்னோக்கி செல்ல ஆசைப்பட்டால் தான் இருக்கும் இடத்தை தக்க வைக்கவாவது முயற்சிப்போம். முயற்சிக்கு ஆசை வேண்டும் .பேராசைதான் கூடாது.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான கருத்துக்கள்... தொடர வாழ்த்துக்கள்... நன்றி...

அ .கா . செய்தாலி said...

இறுதி வரிகள் எனக்காக எழுதுயதுபோல் இருந்தது
சொல்லோசையில் மதியை தட்டி உணர்த்துகிறது தோழி

உங்களுடன் ஒரு விருதை பகிர்ந்துள்ளேன் அன்புடன் ஏற்றுக்கொள்ளுங்கள்

http://nizammudeen-abdulkader.blogspot.com/2012/08/blog-post_22.html

Seeni said...

unmaiyaana vari!

Athisaya said...

ஆசைதான் ஆக்குகிறது.அதுவே அழிக்கிறது.கடிவாளத்தை இறுக்காவிட்டால் ஆபத்துத்தான்.சிறப்பான தொடர் சொந்தமே!தொடருங்கள்.மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.


ஒரு தேநீரும் அவன் நினைவுகளும்.!!!!! !

Anonymous said...

ஆசைகளும் ஆர்வமும், இந்த 2 விசயங்களையும் பகுத்தறியத் தெரிந்துவிட்டால் நமக்குக் குழப்பமே இல்லாமல் வாழ்க்கை நகறுமே! நல்ல பதிவு!

பால கணேஷ் said...

நாம் யாரிடம் ஈர்ப்பு வைத்திருக்கிறோமோ அவர்கள் பிரியும் போதெல்லாம் விக்கித்து நிற்கிறோம் - மிகச் சரியான வார்த்தை, நான் விரும்பிய சில நட்புகளும் உறவுகளும் என்னை தவறாகப் புரிந்து கொண்டு விலகிச் செல்லும்படி நேர்ந்த சந்தர்ப்பங்களில் கலங்கி நின்றதும். அழுத காலங்களும் என் வாழ்வின் பக்கங்களில் உண்டு. மனதை சமநிலைக்குக கொண்டு வருவது என்பது மிகக் கடினமானது. அப்படிச் செய்ய முடிந்து விட்டால் எதுவும் நம்மைப் பாதிக்காது. இப்போது ஓரளவு பக்குவம் அடைந்திருக்கிறேன் என்பது என் நம்பிக்கை.