Thursday, August 23, 2012

உள்ளத்தின் ஓசை - 13 ( உறக்கம் )


மரணம் பற்றிய முந்தைய பதிவு நண்பர் பலருக்கும் படிக்கும் போது  பயத்தையும்   படித்து முடித்தபின் ஒரு தெளிவையும்   ஏற்படுத்தியதாக சொன்னார்கள் உள்ளூர மகிழ்ச்சி எனக்கு அதனால் மீண்டும் மரணத்தை பற்றி எழுதுகிறேன்

நாம் தினமும் மரணிக்கிறோம் என்று சொன்னால் நீங்கள் ஆச்சர்யபடுவீர்கள் ஆனால் அதுதான் உண்மை

மரணம் என்பது இன்னும் நம்மால் உணரமுடியாததாக நாம் உணர்கிறோம் அதை பற்றிய தவறான ஒரு எண்ணத்தை  பயத்தை நமக்குள் ஆரம்பம் முதல்  விதைத்துவிட்டார்கள் .

மரணம் என்பது அனைத்தையும் விடுவித்த ஒரு ஆழ்ந்த உறக்க நிலை

இந்த உறக்க  நிலையை நாம் தீர்மானிக்க முடியாது அது தானே நிகழும் அப்படி நிகழும் போது  அதை ஏற்றுக்கொண்டு அதனோடு நாம் ஐக்கியமாகும போது  அந்த சூழல் அழகாகிறது .

அந்த சூழலை நாம் மாற்ற முயலும் போது  அது விபரீதத்தில் முடிகிறது .

மரணம் என்பது இருப்பதை இழந்துவிட்டு புதிய வாழ்க்கைக்குள் புகுவது இதுவரையில் இருந்ததையெல்லாம் உதிர்த்துவிட்டு தன்னை புதுபித்துக் கொள்ள பழகி கொள்வது.

அது அவ்வளவு சுலபம் இல்லை  நமக்கு விருப்பமானதை இழப்பது என்பது சிரமமான ஒன்றாக இருக்கிறது.


எளிதில் கணித்துவிடமுடியாத மௌனத்தை போன்றது மரணம்
வெளிச்சத்தில் நம் செயல்களை திட்ட மிடுகிறோம் ஆனால் .இருளில் நம்மை நொடி பொழுதில் தழுவும் உறக்கத்தை நம்மால் திட்டமிட முடியாது.இதுதான் மரணம்.

அந்த இருண்மை  நம்மை இலகுவாக்கி பறக்க வைக்கிறது , ஒரு இறகை போல மிதக்கிறோம் உலகை துறக்கிறோம் எந்த வித எதிர்பார்ப்புகளும் ,கடமைகளும்  இல்லாமல். அனைத்தையும் கழற்றி வைத்துவிட்டு நிர்வாணமாய் நிற்கிறோம் .

இந்த நிலையை நாம் தினமும் அடைகிறோம் ஆனால் அந்த இருண்மை வியாகியதும்  விழிப்பு வந்ததும்  நாம் புதிதாய் பிறக்கிறோம் வெளிச்சத்தை எதிர்கொள்ள பல வேசங்களை கட்ட துணிகிறோம் .

ஆனால் இருளுக்கு வேஷம் தேவை இல்லை அது உண்மையான வெளிப்படையான அகநிலையை வரவேற்கிறது .

ஆகவே அந்த மரணம் நம்மை மலர செய்கிறது உள்நோக்கி நம்மை உற்றுநோக்க வைக்கிறது அதற்குள் நாம் காணாமல் போகிறோம் நம் கடந்த காலங்களை மறந்துபோகிறோம் .இதற்கான ஒத்திகைதான் உறக்கம் .

ஆகவே உறக்கத்தை வரவேற்கிறோம் பகலில் போடப்படும் வேசங்களை தூக்கி எறிய  காத்திருக்கிறோம் இரவை எதிர்பார்த்து இருக்கிறோம் . 

எனவே மரணம் அழகானது ,ஆச்சர்யமிக்கது , அற்புதமானது அதை வரவேற்ப்போம்


( ஓசை தொடரட்டும் )

6 comments:

செய்தாலி said...

என்ன சொல்ல ம்(:
என்ன ஒரு ஒற்றுமை பாருங்கள்
மரணம் பற்றிய உங்கள் எழுத்துக்கும் என் கிறுக்கலுக்கும்

பாருங்கள் தோழி

http://nizammudeen-abdulkader.blogspot.com/2012/06/blog-post_26.html

Anonymous said...

நமக்கு விருப்பமானதை இழப்பது என்பது சிரமமான ஒன்றாக இருக்கிறது./// அதுதான மனிதனின் மறன பயத்திற்கே காரணம்! உடல் மனம் ஆகியவற்றையும் அதைச் சார்ந்த விசயங்களையும் இழக்க மனமில்லாமையே மறன பயம்! அருமை தோழி!

பால கணேஷ் said...

அருமையான, மறுக்க இயலாத கருத்துக்கள். அருமை தோழி.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான கருத்துக்கள் சகோதரி... நன்றி...

”தளிர் சுரேஷ்” said...

மரணம் பற்றிய தெளிவான சிந்தனை! அருமை!
இன்று என் தளத்தில்
அஷ்டமி நாயகன் பைரவர்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_24.html

இந்திரபோகன் said...

"உள்ளத்தின் ஓசை - 13 ( உறக்கம் )"



மேம்,
மரணத்தை ஒரு புதிய கண்ணோட்டத்தில் சொல்லி,
அப்படிப்பட்ட மரணித்தலை வரவேற்போம் என்று முடித்திருக்கிறீர்கள். அதாவது
" பழையன கழிதலும் புதியன புகுதலும் " என்பதில் இந்த பழையன கழிதல் என்பது
மரணம். புதியன புகுதல் என்பது பிறப்பு. இந்த இடத்தில் தங்களோடு சற்று
முரண்படுகிறேன். பழையது என்பது ' நம்மிடையே தொடர்ந்து இருந்து
கொண்டிருப்பது ' என்று பொருள் கொள்ளப்பட்டால், நம்மிடம் இருக்கும்
எதுவுமே அது நம்முடன் இருக்கும் வரை அதன் அருமை நமக்குத் தெரிவதில்லை.
நாம் ஏதோ ஒரு " சலிப்பில் " மாற்றங்களைத் தேடி ஓடிக்கொண்டே இருக்கிறோம்,
தொடர்ந்து தேடிக்கொண்டே இருக்கிறோம்.

ஆனால், அப்படிப்பட்ட ஓடுதலும் தேடுதலும் தேவையா ?