Thursday, August 16, 2012

உள்ளத்தின் ஓசை - 8 (நான் யார் ?)


நான் என்பது யார் ? 
எப்போது உருவானது இந்த நான் என்று என்னை கேட்டுகொண்டிருக்கும் போது உதிர்த்த விடைகளும் வினாக்களும் என்னையே திகைக்க வைக்கிறது சில நொடிகளில் .

ஏனென்றால் பெரும்பாலும் நான் என்பது என் பெயராலே அடையாளபடுத்தபடுகிறது அப்படிஎன்றால் வெறும் குறியீடுதான் நானா ? என் பெயரை தெரிந்த அளவில் மட்டுமே என்னை தெரியும் என் பெயர் தெரியாத அளவில் நான் எப்படி நானாக முடியும் ?

வயதை வைத்து சொல்லலாம் என்றால் அது மாற்றத்திற்குரியது ..பதவி என்று எடுத்துகொண்டால் அது நிரந்திரமில்லாதது கல்வித்தகுதியை சொன்னால் அது நானாக உருவாக்கிகொண்டது ...

என் உருவம் மாற்றதிற்குரியதாக இருக்கிறது பரிணாமத்தின் கைகளில் சிக்கிய கல்லை போல ஒவ்வொரு காலகட்டங்களிலும் என் வளர்ச்சியில் உருவத்தில் மாறுதல் ஏற்பட்டு கொண்டு இருக்கிறது என் இளமை என்னை மயக்கவும் செய்கிறது அதே சமயம் பயன்கொள்ளவும் செய்கிறது .........

நேற்று இருந்தது இன்று இல்லை இன்று என்பதும் நிரந்திரம் இல்லை ..நாளை என்பது நிச்சயமற்ற நிலையில் நான் என்பதை எதுவாக கொள்ளமுடியும் 

இந்த சிந்தனையை தகர்த்தது ஒரு ஞானியின் தத்துவம் வார்த்தைகள் ..

ஒரு பெண்மணி இறந்துபோன தன் கணவனை எழுப்பி உயிருடன் தருமாறு வேண்டுகிறாள் அந்த ஞானியிடம் அதற்க்கு அவர் " எந்த கணவனை ? என்று கேட்ட கேள்வியில் அந்த பெண்மணி உறைந்து போகிறாள் ! மீண்டும் கேட்கிறார் " உனக்கு எந்த கணவன் வேண்டும் கல்யாணத்திற்கு முன் பார்த்த கணவனா? அதற்க்கு பின் பார்த்த கணவனா ? வாலிபனாக இருந்த கணவனா ? இறப்பிற்கு முன் பார்த்த கணவனா ? எந்த கணவன் ?என்று கேட்கிறார் ?

சரியாக அர்த்தம் புரிந்துகொள்ளுங்கள் பல கணவன் இல்லை ஒரே கணவனின் பரிணாமத்தின் காலன்களை கணக்கிட்டு அவர் கூறுகிறார் .அந்த பெண்மணி குழம்பி போகிறாள் அதன் பின் அவர் கூறுகிறார் "பிறப்பைபோல இறப்பும் இயற்கைதான் அதை மீண்டும் பெற நினைப்பது அறிவீனம் என்கிறார். 

இதை ஏன் சொல்கிறேன் என்றால் நான் என்பது பரிணாமத்தின் வளர்ச்சி மரணத்தின் நகர்தல் என்னுடைய வளர்ச்சி என்பது நான் மரணத்தை அணுக என்னை தயார் படுத்துகிறேன் என்று அர்த்தம் .......

இன்னும் ஒரு விளக்கம் சொல்கிறேன் 

ஒருவர் விபத்தில் இறந்துவிட்டால் நாம் வருத்தபடுகிறோம் நோய்வாய்பட்டு இறந்திருந்தால் கூட பரவாயில்லை இப்படி திடிரென்று இறந்துவிட்டாரே .....என்று மனம் புலம்புகிறது ஏன் தெரியுமா அது இறந்தவருக்கான அனுதாபம் இல்லை . நம்மை அவருடைய மரணத்திற்கு தயாற்படுதிகொல்வதற்கான உபாயம் .

கொஞ்சம் கொஞ்சமாக நம் மனம் சகஜ நிலைக்கு வந்துவிட்டால் மரணத்தை ஜீரனித்துகொண்டது என்று அர்த்தம் .

அப்போது நான் என்பது என்ன ? வினாவிற்கான உங்களின் விடைகளை என்னிடம் கொட்டி செல்லுங்கள் 


(ஓசை தொடரும் )

5 comments:

பால கணேஷ் said...

சிந்தனைகள் என்பது நானா? அப்போது நானாகிய உடல் இறந்து விட்டால் சிந்தனைகள் இல்லை. அப்போது நான் இல்லாதவனாகி விடுவேனா? இந்த ‘நான்’ என்கிற கேளவியின் விடை தெரிந்தவர்கள் ஞானிகள். விடை தெரிந்து கொள்ள முயல்கிறோம் நாம். வளர்ச்சி என்பது மரணத்திற்கான தயார்படுத்திக் கொள்ளுதல் என்கிற சிந்தனையோட்டம் அருமை. படிக்கும் போதே கை தட்டி வரவேற்றேன். இன்னும் பல எண்ண அலைகள் என்னுள் இப்போது தளும்பிக் கொண்டிருக்கின்றன் இந்தப் பதிவினால். சிந்திப்பதற்கு விஷயம் தரும் தோழி, நீங்கள் வாழி!

Seeni said...

sako !


neengal sonnathe sari....

அ .கா . செய்தாலி said...

இந்த நான்
நம்மில் தற்கால நிலையில் இருக்கிற ஓன்று
அதன் பரிமாணம் மாறிக்கொண்டு போகும் என்பது அப்பட்டமான உண்மை
நான்
நேற்று இன்று நாளை இந்த கேள்விகளின் இடைவெளிகளில் நம்ம்மால் உணர முடியும்
நம் பரிமாணத்தின் மாற்றத்தை
அப்படிஎன்றால் இந்த நான் நம்மில் எந்த பரிமாணத்தில் நிலையை இருக்கிறான்
இதே கேள்வியை தனக்குள் கேட்டான் சித்தார்த்தன் (புத்தன் )
அவனுக்கும் நான் யார் என்ற கேள்விக்கு விடை கிடைக்கவில்லை ஆனால் அவன் தவம் தொடர்ந்தது
இது பிர்கால்த்ஹில் வாழ்ந்த சங்கரன் வரை தொடர்ந்து அவர்களுக்கும் விடை கிடைக்கவில்லை
ஆனால் தவம் தொடர்ந்து

இந்த நான் என்ற பதம் நிலையற்றது என்பதே மெய்
அதை உண்மைபத்துவதுதான் நீங்கள் சொன்ன கதை

நான் என்பது ஒரு தேடல்தான்
நம்மில் நம்மை தேடுவது
நம்மில் எந்த ஒரு நிலையை கொண்டு நாம் திருப்தி அடைவோம் என்றால்
அதற்கு விடையில்லை

ஓசை தொடரட்டும்

திண்டுக்கல் தனபாலன் said...

'நான்' என்பதை நாம் தான் நம்மில் தேட வேண்டும்... அவ்வாறு கண்டு கொண்டால், இந்தக் கேள்வியே வராது...

தன்னை அறிந்தவர்கள் வேண்டுவது பிறவாத வரம்...

இவை சுருக்கம்... விரிவாக எழுதலாம்... அவரவர் உணர்ந்தால் தான் அதற்கே சிறப்பு...

நன்றி...

குருச்சந்திரன் said...

" நான் " என்பது என்ன ? எவ்வளவு பெரிய கேள்வி இது ! நான் என்ற உணர்வு நிரந்தரமாக அற்றுப் போவது தான் மரணம் என்கிறார்கள் ! அதன் பின் அதன் " நான் " என்ற உணர்வு தோன்றவே தோன்றாதா ? அப்படியானால் " நான் " என்ற உணர்வுதான் உயிரா ? நன்றாகத் தூங்கும் போதும் இந்த நான் உணர்வு இருப்பதில்லை ! ஆனால் உயிர் இருக்கிறது ! அப்படியானால் " நான் " என்பது என்ன ?

எங்கேயோ, இந்தியாவில் தமிழ்நாட்டில், ஈரோட்டுக்குப் பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்த ஒரு உயிர் எப்படி நான் ஆகியது ? அல்லது ஆனேன் ? இறப்பிற்குப் பின் எதுவுமற்ற சூனியப் பெருவெளியில் எந்த உணர்வுமே இல்லாமல் சூநியத்தொடு சூனியமாகக் கலந்து விடுவோமா ? கொஞ்சம் பயமாக இருக்கிறது ! நிச்சயம் , மகாப் பெரிய கேள்வியைக் கேட்டிருக்கிறீர்கள் ! முடிந்தால் இதற்கான விளக்கத்தையும் ஏதாவதொரு பதிவில் சொல்லி விடுங்கள் ! புண்ணியமாகப் போகும் !