Friday, August 17, 2012

உள்ளத்தின் ஓசை - 9 ( பதற்றம் )



நான் யார் என்று கடந்த பகுதியில் எழுப்பிய வினாவிற்கு சில நண்பர்கள் விடைகளை சொல்லிச் சென்றனர் .

ஆனாலும் நிறைவு பெறவில்லை நான் என்பதின் அர்த்தம் ....

வாழ்வின் ரகசியத்தின் தேடல் இடைவிடாது தொடர்ந்து கொண்டே இருக்கிறது .நமக்கு உள்ளே தேடுவதை விட நமக்கு வெளியே தேடுவது சுலபமாக இருப்பதால் வெளியே தேடுகிறோம் நாம் நாமாக இருப்பதில் நமக்கு உடன்பாடில்லை 

உலகில் உயர்ந்த ஒன்றோடு நம்மை ஒப்பிட்டு பார்ப்பதே நம் தேடலின் வேலையாகிபோனது .நம்மை எல்லோருக்கும் தெரிந்திருக்க வேண்டும் என்கிற ஆசை. நம்மை முழுதாக நாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற அக்கறை நமக்கு இல்லை , பிறர் நம்மை தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்ற ஆவல் மட்டுமே பெரும்பான்மையாக இருக்கிறது 

ஒரு மனிதர் எப்போதும் எதையாவது சேகரிப்பதிலே தன் நேரத்தை தொலைப்பார் .கூடு விட்டு கூடு பாய்வது போல பொருள் விட்டு பொருள் பாய்ந்து அவரின் சேகரிப்பு தொடர்ந்தது .வேறு ஒரு புதிய பொருளை பார்கையில் அதுவரை சேகரித்த பொருள்கள் அவருக்கு அபத்தமாய் படும் .

இறுதியாய் ஒரு நாள் அவரை  சந்தித்த அவரின் நண்பர் அவரின் இல்லம் முழுவதும் ஒரு ஞானியின் படத்தை கண்டார் " இப்பொழுது என்ன சேகரிக்கிறீர்கள்  என்று நண்பரிடம் கேட்டார் "எல்லாவற்றையும் நிறுத்திவிட்டேன் இவர் சொல்லித்தான் என்று ஞானியின் படத்தை பார்த்து சொன்னார் ....இப்பொழுது அவரின் புகைப்படங்களை பல்வேறு கோணங்களில் சேகரிப்பது தொடர்ந்துகொண்டு இருக்கிறது .

இப்படிதான் நாம் ஒரு பொருளை தேடுகையில் வேறு ஒரு பொருள் கிடைகிறது இன்னொரு பொருளை தேடுகையில் பிறிதொரு பொருள் கிடைகிறது .

நாம் எதை தேடுகிறோமோ அதற்கான பிரயதங்களை நிறுத்தும் போது அந்த பொருள் விழிகளுக்குள் தட்டுபடுகிறது இந்த அனுபவம் நம் எல்லோருக்கும் நடத்திருக்கும் .

பொருள் அந்த இடத்திலேதான் இருக்கிறது 

விழிகளும் இடம்பெயரவில்லை 

ஆனாலும் தேடல் சிரமமாயிருகிறது காரணம் பதற்றம் தான்.

இந்த பதற்றத்தை உற்றுநோக்கினால் அது 'பேராசை ' என தோன்றும் 

பதற்றம்  புலன்களை மழுங்கடித்துவிடுகிறது பல வியாதிகளை உருவாக்கி விடுகிறது .நமக்கு நாமே ஏற்படுத்திகொள்ளும் 'வன்முறை' என்றே சொல்லலாம் அப்போது நம் கண்கள் மறைக்கபடுகிறது , உடல் கொதிக்கிறது , மனம் களைத்துபோகிறது இதற்கு காரணம் தேடலில் மெல்லிய இழையை போல ஆசை ஒட்டிகொண்டிருப்பதுதான். 

'இது மட்டும் கிடைத்து விட்டால் 'என்று  நம் மனதில் எழுகிற கற்பனைகள் நம் பதற்றத்தை அதிகரிக்க செய்கிறது .

அதை போக்க என்ன செய்யாலாம் ? 

(ஓசை தொடரும் ) 

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

திருப்தி இல்லாமல்... மன அமைதி, மன உறுதி இல்லாமல், குழப்பத்தோடு, எவ்வளவு நாள்
வெளியே
தேடினாலும் பதில் கிடைக்காது...

உங்கள் பதிவிலேயே கேள்விகளும் உள்ளன... பதில்களும் உள்ளன... தேடினால் கிடைக்கும்...

பால கணேஷ் said...

தேடல் என்பது மனித வாழ்வில் இன்றியமையாத அம்சம். அது இன்றேல் வாழ்வில் சுவாரஸ்யம் இல்லை. அதனால்தான் ‘அத்தனைக்கும் ஆசைப்படு’ என்கிறார் சத்குரு ஜகி வாசுதேவ், ஆனால் அது பேராசையின் பாற்பட்டு வெறியாகி விடும் போதுதான் ஏமாற்றங்களும், கோபங்களும், துரோகங்களும் ஒன்றையொன்று துரத்தி வருகின்றன. பதற்றம் என்பது நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல் மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று. தன்னை அறிந்தால். தனக்குள் தேடினால் எல்லாவற்றுக்கும விடை கிடைத்துவிடும் என்பதே உண்மை.

கோவி said...

இனிமை வேண்டுமானால் தேடல் வேண்டும்.. அருமை..

கோவி said...

இனிமை வேண்டுமானால் தேடல் வேண்டும்.. அருமை..