Thursday, July 12, 2012

உள்ளத்தின் ஓசை - 4 ( விழிப்பு )



ஈசாப்பின் கதை ஓன்று :


ஒரு காட்டில் முயல்கள் எல்லாம் கூடின .எதனை கண்டும் அஞ்சி அஞ்சி ஓடும்

     தம் வாழ்வை நினைத்து வருந்தின .

    ஓயாத துன்பத்தில் ஆழ்ந்து  வருவதைவிட தற்கொலை செய்து கொண்டு

    இறப்பதே மேல்  என்று அவை கருதின.


காட்டில் வாழும் முயல்கள் அனைத்தும் திரண்டு மலை உச்சியை நோக்கி

    நடந்தன உச்சிலிருந்து கீழே மடுவில்  குதித்து இறக்க துணிந்தன.


முயல்களின் கூட்டத்தை கண்டதும் மடுவின்  கரையில் உள்ள தவளைகள்

     எல்லாம் அஞ்சி மடுவுக்குள் பாய்ந்து மறைந்தன.



சாக நினைத்த முயல்கள் வியப்புடன் தவளைகளை கூர்ந்து கவனித்தன

     உலகில்  தங்களைவிட அஞ்சி வாழும் தவளைகளும் இருகின்றன என்பதைக்

    கண்ட முயல்களுக்கு ஆறுதல் ஏற்பட்டது .


இந்த கதை ஈசாப்பின் மதி நுட்பத்திற்கு சான்று ......


நம்மில் பெரும்பான்மையானவர்கள் கழிவிரக்கதிலும் , சுய இறக்கத்திலும்

    வாழ்வை கழிக்கிறார்கள் அவர்களை விட துன்பத்திலும் சோகத்திலும்

வாழ்ந்து கொண்டிருப்பவர்களைப் பார்க்கும்போது அவர்களுக்கு ஆறுதல் 


ஏற்படுகிறது . இவர்களுக்கெல்லாம் ஒன்றை சொல்ல விரும்புகிறேன் 



          "அக்கறைக்கு இக்கரை பச்சை " என்ற பழ மொழி உண்டு ......அதாவது


 பள்ளத்தில் நிற்பவன் மலையை பார்த்து பெரு  மூச்சு விடுகிறான்  மலை மேல் 


நிற்பவன் பள்ளத்திலேயே இருந்திருக்கலாம் என்று  மூச்சு திணறுகிறான் 


ஆகவே ஒப்பிடுதல் என்பது ஆரோக்கியமாக இல்லாத சூழலில் மனதில்

நோய்களின்  தாக்கம் ஏற்பட்டு மிகுந்த மன உளைசளுக்கு ஆளாக நேரிடலாம் 

அதிலிருந்து விடுபட வேண்டும்


 எவன் ஒருவன் தன் துன்பங்களை எல்லாம் தாங்கிகொண்டு 


     அடுத்தவர்களின் துயரத்தை   துடைக்க   முன் வருகிறானோ அவன் 


    சான்றோன் என போற்றபடுகிறான் 



ஆகவே  விழுந்து விட்டோம் என்று கவலை கொள்வதை விட  எழுந்து நடக்க

முயலுவது புத்திசாலித்தனம் ..


                                                                                                              (ஓசை தொடரும் )


6 comments:

கோவை நேரம் said...

தொடரட்டும்...ஓசை...

Seeni said...

arumai sako!

செய்தாலி said...

தவளையின் பயம்
முயலின் ஆறுதல்

இப்படித்தான் இந்த சமூகத்தில்
நிறைய மனிதைகள் வாழ்கிறார்கள்

இந்த
ஆறுதல் பக்குவம் இல்லாத
ஒரு சில மனிதர்கள்தான்
மரணத்தை முத்தமிடுகிறார்கள்


//பள்ளத்தில் நிற்பவன்
மலையை பார்த்து
பெருமூச்சு விடுகிறான்

மலை மேல்
நிற்பவன் பள்ளத்திலேயே இருந்திருக்கலாம் என்று மூச்சு திணறுகிறான்//

வாழ்கையின் யதார்த்தம்
எதையும் அனுபவிக்கும்போதுதான்
அதன் வன்மம் உணரமுடியும்

சொல்லில்
ஒரு சிலரே உணர்வார்கள்
பட்டால்
நிறையப்பேர் உணர்வார்கள்

அனுபவ சாலிகளால் சொல்லப்பட்டும்
சக்கரம்போல் சுற்றுகொண்டுதான் இருக்கிறது
இந்த ஏக்க கூட்டங்கள்

அனைவருக்கும் அன்பு  said...

//கோவை நேரம் said...
தொடரட்டும்...ஓசை...// நன்ற நண்பா உங்கள் எண்ணம் நிறைவேறட்டும்

அனைவருக்கும் அன்பு  said...

// Seeni said...
arumai sako!// நன்றி நண்பா தொடர்ந்து வந்து ஊக்கம் அளிபதர்க்கு

அனைவருக்கும் அன்பு  said...

//அனுபவ சாலிகளால் சொல்லப்பட்டும்
சக்கரம்போல் சுற்றுகொண்டுதான் இருக்கிறது
இந்த ஏக்க கூட்டங்கள்// என்றேனும் ஒரு நாள் என் எழுத்து அந்த சக்கரத்தில் இருந்து விடுபட வைக்கும் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன் .......காலம் வலியது நண்பா ......நன்றி


*** கருத்து என்பது படிப்பின் அனுபவம் என்பது வெறும் ஒற்றை வார்த்தையில் படைப்பாளியை நிறைப்பது இல்லை ..........உங்களை போல உள்வாங்கியதை வெளியிடுவதும் தான் .........பெரும் விருது கருத்துக்கள் ,,,,,,,,,,தொடர்ந்து எனக்கு விருதை வழங்கும் உங்கள் உள்ளத்திற்கு என் வாழ்த்துக்கள்