Monday, July 9, 2012

நான் ஈ - ஞானி - ( சிரிப்பில் சிகரம் தொட வைத்த சிந்தனை துளி )






ஒரு திரைப்படம் இத்தனை எண்ணங்களை எனக்குள் உருவாக்கியது பெரும்      ஆச்சர்யம் 

பல தத்துவங்களும் தனித்துவங்களும் நிறைந்த அழகிய வெளிபாடு இக்கதை 
கதை நகர்த்துதல் என்பது ரசிகனின் விழிகளில் இருந்து அகலாமலே அவனை      அடுத்த கட்டத்திற்கு விழிப்புடன் நகர்த்துகிறது ......

அதை அழகாக நிகழ்த்தியிருக்கும் இயக்குனர் பாராட்டுக்குரியவர் ..........


இந்த படத்தின்  இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி, மகாதீரா (மாவீரன்) எனும் அரச கதையை கொண்ட திரைப்படத்தை உருவாக்கியதன் மூலம் தமிழ் திரை ரசிகர்களிடையே நன்கு அறிமுகாகிக்கொண்டவர்.

மேலும் கதையின் நாயகன் நாணி , நாயகி சமந்தா . வில்லன் சுதீப் இவர்களுடன் கடைசியில் சந்தானம் இணைந்து அசத்தலான நடிப்பில் மனதில் நிற்கிறார்கள் அகலாமல்


கதைச் சுருக்கம்: ஈ அளவு கதைதான் - 

தொழிலதிபர் சுதீப் ஒரு ப்ளேபாய் ( பெண்களுடன் மட்டும் விளையாடுபவர் ) , டொனேஷன் கேட்டு வரும் சமந்தாவுடன் விளையாட நினைக்கிறார் ; அதற்கு தடையாக, சமந்தாவின் எதிர் வீட்டுக் காதலன் நானி (நான் ஈ இவர்தான் - வெப்பம் மூலம் தமிழில் அறிமுகமான நடிகர்!). எரிச்சலாகும் சுதீப், நானியை நசுக்கிக் கொல்ல அவர் ஈயாக மறுபிறப்பெடுத்து, சுதீப்பை தீயாக பழி வாங்குகிறார்! 

ஆனால் பழிவாங்குதல் என்ற கோணத்தில் மட்டும் பயணிக்க முடியவில்லை 
சொகுசு பயணம்  மேற்கொண்டது போல,  ஒரு இன்பசுற்றுலாவை அனுபவித்தது போல அனைவரின் உள்ளமும் மகிழ்ச்சியில் ஒரு குழந்தையை போல துள்ளி குதித்து கொண்டிருந்தது  அரங்கில் ...........

இப்படி பட்ட திரைப்படங்கள் மன நோய்க்கான மிகச்சிறந்த மருந்து ..............

வாய்விட்டு சிரிச்சால் நோய் விட்டு போகும் ..........'' ஆனால் யாரும் அதற்க்கு தயாராக இல்லை அப்படியே தவறி அந்த செயல் நிகழுமாயின் அவன் கேளிக்குரியவனாக பார்க்கபடுகிறான் இப்படிபட்ட சூழலில் தன்னை மறந்து அந்த திரையரங்கின் இருண்மைக்குள் ஒரு பிரகாச ஒலி ஒலிப்பதை அனைவரும் வரவேற்று இருந்தனர் ...........அது அவர்களின் துள்ளலில் தெரிந்தது .........

கதையின் ஆரம்பத்தில் நாயகன் என்று நாம் எதிர்பார்க்கும் அத்தனை அம்சங்களுகுரிய ஒரு வில்லன் அறிமுகமாகிறார் தெலுங்கு திரை உலகில் கலக்கியவர் தமிழின் உச்சரிப்பு சற்று வேறுபட்டு தெரிந்தாலும் அவரின் நடிப்பில் பாவனைகளில் அதை நிறைவு செய்கிறார் .........

அவருக்கு பெரிய பாராட்டை சொல்லியே ஆகவேண்டும் படத்தின் முழு காட்சிகளை அவரே ஆக்கிரமித்து இருந்தார் ......வில்லனாக , காதல் காமம் நகைச்சுவை என்று என்று அனைத்தும் சரியான விகிதத்தில் கலந்து கொடுத்து இருக்கிறார் ..........

அடுத்த கதையின் முக்கிய நாயகன் ஈ தமிழ் திரை உலகில் விலங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து தேவர் பிலிம்ஸ் பல படங்களை வெளியிட்டு அவை பெரும் சாதனைகளை படைத்திருந்தாலும்  ........நம் அன்றாட வாழ்வில் பல முறை நம்மோடு பிணைந்து நமக்கு பெரும் தலை வலியை அவஸ்தையை தரக்கூடிய ஆனாலும் நம்மோடு எப்போதும் இருக்க கூடிய ஈ தான் கதையின் நாயகன் ........

மனிதனின் பரிணாமத்தின் பெரும் மாற்றங்களை நாம் மிகவும் எளிதாக ஏற்றுக்கொண்டு அடுத்த கட்ட நகர்வுகளில் பயணித்து கொண்டிருக்கிறோம் ஆனால் மேலை நாட்டினரை போல வீட்டு விலங்குகளை ஒரு சக மனிதனை போல பாவித்து அவற்றின் தேவைகளை கொடுப்பதில் நாம் தவறுகிறோம் பல நேரங்களில்  அப்படி இருக்க ஒரு ஈ இன் உடலில் புகுந்த இருப்பது காதலனின் ஆவி என்று அறிந்த பின் அதனோடு பேசுவதும் அதற்க்கு தேவையான வசதிகள செய்து அதன் மேல் காதல் கொள்ளும் நாயகியின் வெளிபாடு அருமை ..........

கதையின் நாயகன் இவர் இளம் நாயகன் தனக்கு ஒதுக்கப்பட்ட சில காட்சிகளில் மனதில் பளிச்சென்று பதிந்து  விடுகிறார் எதார்த்த நடிப்பு ,வழியும் புன்னகை அசைவுகளில் இசை மீட்டுவது போல காட்சிகளில் கச்சிதமாக பொருந்தி செல்கிறார் ...

கிரேசியின் ஒவொரு நகர்வும் ஓராயிரம் சிரிப்பு ஒலிகளை ஒலிக்க செய்கிறது ........

அரங்கு களையும் வேளையில் அதிரடி கரகோசத்தோடு  பெரும் சிரிப்பொலிக்க காரணம் சந்தானத்தின் கடைசி காட்சிகள் ..

இடை செருகல் போல ஒரு பத்ரன் வருகிறார் அவர் சொல்லி செல்லும் தத்துவம் நெருடல் என்றாலும் ........கவனிக்க படவேண்டியவைதான் "கருப்பு பெட்டி  எரியும் போது முகத்தில் கரியோடு என்னை பார்க்க வருவாய் "  என்று சொன்னவன் காற்று புகமுடியாத அறைக்குள் இறந்து போவது .......இயக்குனரின் எண்ணத்தின் வெளிபாடு .........மந்திரம் தந்திரம் என்பது ஒன்றும் இல்லை அனுபவம் மட்டுமே நம்மை முன்னோக்கி பயணிக்க வைக்கும் ................ஒருவன் எதை விதைகிரானோ அதை மட்டுமே அறுவடை செய்ய இயலும் என்பதை அழகாக விளக்கியிருக்கிறார் ....


"தெய்வம் நின்று கொள்ளும் 
அரசன் அன்றே கொள்வான்" என்பது போல நாம் செய்யும் செயல்களுக்கான பதில் வினைகள் அடுத்த நொடிகளிலே நமக்கு கிடைப்பது கண்கூடு .....

கதை பார்வையாளரின் மனதில் பல கோணங்களில் விரித்து சென்றாலும் படம் முழுதும் காட்சிபடுத்தபட்ட ஈ உடனான ஆட்டங்கள் நம்மை சிலிர்க்க வைக்கிறது அதன் கலாட்டாக்கள் பல விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது ......

சிறு துரும்பென எதையும் அலட்சியம் செய்துவிட முடியாது உலகில் உள்ள அனைத்து உயிருக்குள்ளும் ஒரு பிரமாண்டங்கள் ஒளிந்து இருக்கிறது ஓவொன்றும் ஒருபிரளயத்தை உருவாக்க கூடியது  .........

எது எப்படினாலும் ஈக்கள் இனி இந்த  படத்தை பார்த்த பின்பாவது மலத்தில் மேய்வதை விட்டு விட்டு மலரை நுகர கற்றுகொள்ளுமா ?


7 comments:

செய்தாலி said...

விமர்சனம் நல்லா இருக்கு

VijiParthiban said...

"ஈ" பட விமர்சனம் மிகவும் தெளிவாக கொடுத்துள்ளீர்கள்... நீங்கள் கொடுத்த விமர்சனம் படித்ததுமே படம் பார்த்த உணர்ச்சி வந்துவிட்டது..... நல்ல பகிர்வு ...

கோவை நேரம் said...

விமர்சனம் ஓகே...ஆனா இதை படித்த வுடன் படம் பார்க்க பிடிக்குமா என்று தெரியவில்லை..படமும் கவிதை போல் இருந்து விட்டால் என்ன செய்வது..

கவிஞரா இருந்தா இப்படிதான் எழுத முடியும் அப்படிங்கிறத இந்த விமர்சனம் படிச்சி தான் தெரிஞ்சு கிட்டேன்..

அனைவருக்கும் அன்பு  said...

விமர்சனத்தை பாராட்டிய நண்பர் செய்தாலி, அவர்களுக்கு உளமார்ந்த நன்றியுடன் என் மகிழ்ச்சி .

அனைவருக்கும் அன்பு  said...

// நீங்கள் கொடுத்த விமர்சனம் படித்ததுமே படம் பார்த்த உணர்ச்சி வந்துவிட்டது..... நல்ல பகிர்வு ..// விஜி பார்த்தீபன் அவர்களுக்கு உளமார்ந்த நன்றியுடன் என் மகிழ்ச்சி ......

அனைவருக்கும் அன்பு  said...

//படமும் கவிதை போல் இருந்து விட்டால் என்ன செய்வது..// நண்பர் கோவை நேரம் அவர்களுக்கு .....விமர்சனம் என்ற வகையில் ஒருவரின் படத்திற்கு நான் விளம்பர தாராரும் இல்லை அவர்களின் கருத்துக்கு கண்மூடி தலையாட்டும் பொம்மையும் இல்லை ................தனி மனித எண்ணங்களின் பிரதிபலிப்பு .........என்னளவில் என்னை பாத்தித்த விசயங்கள் நான் விவரித்து உள்ளேன் ...............அவ்வளவே ........

Tamilthotil said...

"கதை பார்வையாளரின் மனதில் பல கோணங்களில் விரித்து சென்றாலும் படம் முழுதும் காட்சிபடுத்தபட்ட ஈ உடனான ஆட்டங்கள் நம்மை சிலிர்க்க வைக்கிறது அதன் கலாட்டாக்கள் பல விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது ......"

விமர்சனம் அழகாக படத்தைப் போலவே ரசிக்க முடிந்தது. இடையில் இந்த படத்தை வைத்து சமூகத்திற்கு நீங்களும் சில செய்திகள் சொன்னது அருமை