Tuesday, July 3, 2012

வாய்மை



மலர்களில் சுழலும் ஒரு வகை வண்டும் 
மலத்தில் சுழலும் ஒரு வகை வண்டும் 
ஒரு நாள் சந்தித்து கொள்ள நேரிட்டது 
சான வண்டு கேலியாகச் சொன்னது 

"எப்படியிருக்கிறாய் நீ ?  எனக்கு உன் பாட்டனாரையும் தெரியும்  அவருடைய பாட்டனாரையும் தெரியும் பாவம் நீங்கள் எல்லோரும் அல்பாயுசில் மறைந்து விடுகிறீர்கள் ...என் மாதிரியான கெட்டியான உடம்பும் வைரம் பாய்ந்த இறக்கையும் உங்களுக்கு இல்லை என்பதை நினைக்கையில் எனக்கு பரிதாபமாக இருக்கிறது என்று சொன்னது ."

மலர் வண்டு சொன்னது 
"மலத்தைச் சுற்றிச் சிரஞ்சீவியாக வாழ்வதிலும் 
மலரைச் சுற்றி சிலகாலம் வாழ்வதே சிறந்தது " என்று கூறிப் பறந்து சென்றது ......

உலகில் மலர்களை நுகர்ந்து அவற்றின் மகரந்ததுடன் பேசி , புதிய கனிகளை உருவாக்கும் உயர்ந்த மனிதர்கள் மரணத்தைப் பற்றி கவலைபடுவதில்லை அவர்கள்தான் சான்றோர்களாய் சரித்திரத்தின் ஏடுகளில் இடம் பிடிகிறார்கள் சமுதாயத்தின் முன்னேற்றத் தேருக்கு வடம் பிடிக்கிறார்கள்.

ஆகவே உன்னை விளக்க நீ முன்வரவேண்டும் அதற்க்கு உன்னை நீ உணரவேண்டும் அதற்க்கு வாய்மையால் மெய்யை உணரவேண்டும் .

புறத்தே உள்ள ஒளிகள் விரைவில் மங்க கூடியவை 
அகத்தே காணப்படும் இருள் மட்டுமே நிரந்திரமானது ..

அதனால்தான் நாம்  உருவாக்கும் இருள் அறைக்குள் இருக்கும் வெளிச்சத்தை வெளியே விரட்டுகிறோம் .காரணம் புற விளக்குகளின் வழிகாட்டுதலில் செல்லும் போது பல தடைகள் உள்ளன விழிகள் ஒளிகளை கண்டு ஒரு புள்ளியில் செயலிழக்கின்றன.

" எல்லா விளக்கும் விளக்கல்ல - சான்றோர்க்கு 
பொய்யா விளக்கே விளக்கு "

என்று வள்ளுவரும் இதைத்தான் குறிப்பிடுகிறார் ....

காரணம் வாய்மை என்பது யாரையும் புண்படாமல் பழுது படாமல் பார்த்துகொள்கிற இயல்பு 

சிலநேரம் பொய் கூட வாய்மையாகும் அதன் நோக்கம் யாரையாவது காப்பாற்றும் என்றால்.

இதையும் வள்ளுவர் ஒப்புகொள்கிறார் 

" பொய்மையும் வாய்மையிடத்து புரைதீர்த்த 
நன்மை பயக்கு மெனின் "

வள்ளுவர் மானிடத்தை தெய்வீகத்தை நோக்கி உயர்த்துகிற அற்புத உத்திகளை கையாள்கிறார்.

"வாய்மை எனபடுவது யாதெனின் யாதொன்றுந்த் 
தீமை யிலாத சொலல் "

ஆகவே கல்லில் வேண்டாத பகுதிகளை அகற்றி சிற்பம் ஆவதை போல சான்றோராக முயற்சி செய்து பார்க்கலாம் ..

                                                                                                                                                    (முயற்சி தொடரும் )

3 comments:

செய்தாலி said...

நான்
இதை கவனிக்க வில்லை
ம்ம்ம் ... நல் நெறியுள்ள விளக்கம் தோழி

sathishsangkavi.blogspot.com said...

கவிதை வடிவில் ஓர் விளக்கம்....

VijiParthiban said...

மலர் வண்டு சொன்னது
"மலத்தைச் சுற்றிச் சிரஞ்சீவியாக வாழ்வதிலும்
மலரைச் சுற்றி சிலகாலம் வாழ்வதே சிறந்தது " என்று கூறிப் பறந்து சென்றது ......
ஆஹா என்ன ஒரு கருத்து....

அற்புதம் ...