Thursday, July 5, 2012

உள்ளத்தின் ஓசை - 1

ஒரு மடாலயத்தில்  தலைமை குரு அவருக்கு கீழ் பல சீடர்கள் , அவர்களில்

மிகவும் வயதில் இளைய ஒரு சீடன் அந்த மடாலயத்தின் சில பொறுப்புகளை

கவனித்து வந்தான் .


"அங்கு வருகிற சீடர்கள் குருவிடம் தியானதை கற்பதைவிட அவரிடம் சில

விடுகதைகளை கூற சொல்லி அதற்க்கு விடை கேட்பதில் முனைப்பாக

இருப்பதை அவன் கவனித்து வந்தான் ."


 இந்த இளைய சீடனுக்கும் அந்த விடுகதை பற்றியும் தியானத்தை பற்றியும்

 கேட்க ஆவலாக இருந்தது ..நேரடியாக குருவிடம் சென்று எனக்கும்

கற்றுகொடுங்கள் என்று கேட்டான்'


அதற்க்கு குரு "" உனக்கு இன்னும் அந்த வயது வரவில்லை அது வரை

பொறுத்திரு என்றார் " ஆனால் அவனோ  அடம்பிடிக்கிறான் அதனால் குரு

ஒப்புக்கொண்டு ஒரு விடுகதையை முன் வைக்கிறார்.


"எனக்கு  இரண்டு கைகளின் ஓசை பற்றி தெரியும்

ஆனால் ஒரு கையின் ஓசை பற்றி சொல்லுகிறாயா ? என்று கேட்டார் .


சீடன் அவரை வணங்கிவிட்டு அறைக்குள் வந்து சிந்திக்கிறான் சில பறவைகள்

இசைப்பதை  கேட்கிறான் .


மறுநாள் குருவை பார்த்து  குரலில் இசைத்து காட்டி இதுதான் அந்த ஓசை

என்று சொல்லி அவரின் பாராட்டிற்காக காத்திருக்கிறான்

"இல்லை இல்லை என்று மறுத்துவிடுகிறார் "


சீடன் மீண்டும் அமைதியான இடத்திற்கு சென்று தியானம் செய்கிறான் ......

அவன் சித்திக்கும் போது  சொட்டு சொட்டாக நீர் விழும் சப்தம் கேட்டு அதுதான்

ஒரு  கை ஓசை என்று குருவிடம் சொல்லுகிறான் .அதையும் மறுக்கிறார் குரு.


ஒவொருமுறையும் பல வித சப்தங்களை கேட்டு வந்து சொல்லுகிறான் அவர்

எல்லாவற்றையும் மறுக்கிறார்......


"பத்தாவது முறையாக அவன் நிராகரிக்கப்பட்டபோது தான் மீண்டும்

தியானத்தில் அமருகிறான் அது உண்மையான தியானமாக மலர்கிறது அறிய

வேண்டும் என்ற ஆர்வம் கூட    அகண்டு சென்றது .


தியானம் தியானத்திர்காகவே   நிகழ்ந்தது அது வார்த்தைகளற்று உருவானது

மனத்திரையில் எந்த வித காட்சிகளும் உருவாகாத மௌன நிலையை

அடைந்தான் .


சப்தங்களைஎல்லாம் அவன் கடந்து சென்றான் அப்போது அவனுக்கு புரிந்தது

"ஒரு கையின் ஓசை " மௌன நிலை என்று


                                                                                                               (ஓசை தொடரும் )

2 comments:

செய்தாலி said...

ம்ம்ம் ...
அற்புதம் என்ன ஒரு சிந்தனை
தொடருங்கள் ஓசையை அறிய தொடர்கிறேன்

கோவி said...

நல்ல சிந்தனை..