Wednesday, July 11, 2012

உள்ளத்தின் ஓசை - 3

"முல்லா நசுருதீன் வீட்டிற்கு  சொந்தகாரர்  

ஒருவர் வாத்து  ஒன்றை கொண்டு வந்தார் 

அதை முல்லாவின் மனைவி சமைத்து 

இருவருக்கும் பரிமாறினாள் "


கொஞ்ச நாட்கள் கழித்து வரிசைகரமாகப் பலர் 

அந்த வாத்து கொண்டு 

வந்தவரின் சொந்தக்காரரின் உறவினர் , உறவினருக்கு உறவினர் என்று 

சொல்லிக் கொண்டு வந்தவண்ணம் இருந்தனர்.


அவர்கள் அனைவரும் தங்களை ஒரே மாதிரியாக கவனிக்க் வேண்டும்

 ,சாப்பாடு தரவேண்டும் என்று எதிர்பார்த்தனர் .

ஒரு நாள் அந்த வாத்து கொண்டு வந்தவரின் நண்பரோட நண்பர் என்று 

சொல்லிக்கொண்டு ஒருவர் வந்தார்.


முல்லாவிற்கு தாங்க முடியாத கோபம் வந்தது .. ஒரு கிண்ணம் நிறைய சுடு 

தண்ணீர் கொண்டு வந்து அவர் முன் வைத்தார் . அவர் ஒரு வாய் 

அருந்திவிட்டு " என்ன இது ?'" என்று கேட்டார் .


இது உங்கள் நண்பர் கொண்டு வந்த வாத்தினுடைய சூப்பினுடைய 

சூப்பினுடைய சூப்பு என்றார் முல்லா .


அதற்க்கு பின் வருபவர்கள் எண்ணிக்கை நின்று போனது .

இப்படிதான் நம் வாழ்வில் பல சம்பவங்கள் நடக்கிறது .


ஒருவன் நல்லவனாக பண்புள்ளவனாக நடக்க முயன்றால் அவனின் 

குணநலத்தை பரிசோதிக்க என்று ஒரு சாரர் கிளம்புகிறார்கள் ........அதையும் 

மீறி அவன் தன பண்பில் இருந்து விலகாமல் இருக்க பல தடைகளை வலிகளை  

எதிர்கொண்டு வந்தாலும் .....சமூகம் அவனை வாழ்த்த தயாராக இல்லை 

மாறாக அவனை வீழ்த்தவே முற்படுகிறது.


முந்தய காலகட்டங்களை பின்னோக்கி பார்த்தோமானால் பல அரசர்கள் 

,வள்ளல்கள் தங்களின் சொத்துகளை இழந்து சோற்றுக்கு வழியில்லாத 

நிலைக்கு வந்திருப்பது தெரிய வரும் ..


இந்த கால கட்டத்திற்கு பின் தான் 


" தனக்கு மிஞ்சிதான் தானம் தர்மம் "


என்ற பழ  மொழி வந்திருக்க வேண்டும் ....

தன்னை காத்துகொண்டு அதன் பின் மற்றவர்களையும் காக்க நினைப்பது 

சிறப்பு .மேலும் தன உணர்வுகளை உரிய நேரத்தில் வெளிபடுத்த தவறுபவன் 

வாழ்வில் பின்னுக்கு தள்ளபடுகிறான் 




                                                                                                             ( ஓசை தொடரும் )

3 comments:

செய்தாலி said...

இப்படியான
சிந்தனைகளை உங்களிடம் இருந்து வரவேற்கிறேன்

முல்லா
பீர்பால்
தெனாலி ராமன்
இப்படி இவர்களில் கதைகளை
சின்ன வயதுகளில் ஆர்வமாய் படித்ததுண்டு

கதை அருமை
கருத்து சற்று சிந்திக்க வேண்டிய விஷயம்

இறுதிச் சொல் உண்மை

நல்ல பதிவு
தொடரட்டும் ஓசை

அனைவருக்கும் அன்பு  said...

//செய்தாலி said...
இப்படியான
சிந்தனைகளை உங்களிடம் இருந்து வரவேற்கிறேன் //மிக்க நன்றியும் மகிழ்ச்சியும் ..........உங்கள் எண்ணம் போலவே என் படைப்புகள் கதைகளுடன் கலந்துதான் வரவிருக்கிறது

Seeni said...

ada nalla kathai!